திருமந்திரம் -- ஏழாம் தந்திரம் -- கேடுகண்டிரங்கல் -- பாடல் 6:
💐💐💐💐💐💐
இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து
இன்பத்து ளேதிளைக் கின்றது இதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே
💐💐💐💐💐💐
விளக்கம்:
ஆன்மா ஆனந்தமயமானது😇. பிறக்கும் பொழுதும், வாழும் பொழுதும், உணரும் பொழுதும் ஆன்மா பரமானந்தத்திலேயே இருக்கின்றது.
------------------
ஆனால் அதை மறந்து
------------------
அறியாமையால் தாம் துன்பத்திலே😑 மூழ்கியிருப்பதாக கருதிக்கொண்டு அதனைப் போக்க உடை🧥🥻, உணவு🥖🍞 என்று அலைந்து, அவற்றைப் பெற வேண்டி அல்லற்படுகின்றனர். இது இரங்கத்தக்கது😢 என்று திருமூலர் கூறுகின்றார்
No comments:
Post a Comment