திருவாசகம் -- மெய்யுணர்தல் -- பாடல் 2:
☆☆☆☆☆☆☆☆☆☆
கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின்இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே
☆☆☆☆☆☆☆☆☆☆
விளக்கம்:
-------------
எங்கள் தலைவனே! உன் திருவருளோடு கூடி இருக்கப் பெறுவேனாயின்:
⭐⭐⭐⭐
இந்திரன், திருமால், பிரமன் ஆகிய அவர்களுடைய வாழ்வைப் பொருளாக ஏற்க மாட்டேன்
⭐⭐⭐⭐
எனது குடி அழிந்தாலும் உன் அடியாரோடன்றிப் பிறரோடு நட்புக் கொள்ள மாட்டேன்
⭐⭐⭐⭐
நரகத்திற்👹👺 புகுந்தாலும் அதனை இகழமாட்டேன்
⭐⭐⭐⭐
உன்னையன்றி வேறு தெய்வங்களை மனத்தாலும் நினைக்க மாட்டேன்❌
-----------
என்று மாணிக்கவாசகர் கூறி, சிவபெருமானின் திருவருள் பெருமையை உணர்த்துகின்றார்.💐💐
No comments:
Post a Comment