Search This Blog

Saturday, 5 September 2020

சிவ நிந்தை செய்பவர்களின் நிலை

 திருமந்திரம் -- இரண்டாம் தந்திரம் -- சிவ நிந்தை:

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே

அளிவுறு வாரம ராபதி நாடி

எளியனென் றீசனை நீசர் இகழில்

கிளியொன்று பூஞையாற் கீழது வாகுமே

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

விளக்கம்:

தெளிந்த ஞானம் உள்ளவர்கள் சிந்தனை செய்து தமக்குள்ளே இருக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபெருமானை உணர்ந்து அவருடைய அருளைப் பெறுவார்கள்😇.  

⭐⭐⭐⭐⭐⭐⭐

தெளிந்த ஞானம் இல்லாத கீழான மக்கள் சிவபெருமானை சிறு தெய்வமாக எண்ணி இகழ்ந்து🤬 புறக்கணித்தால் அவர்களின் நிலை பூனையால்🐈 கிழிக்கப்பட்ட கிளிபோல ஆகும் என்று திருமூலர் கூறுகின்றார்.



No comments:

Post a Comment