திருநாவுக்கரசரின் மனவுறுதி: 💐💐
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
திருநாவுக்கரசர் (அப்பர்) தனது முதுமை வயதில் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருக்கையிலையில் காண வேண்டும் என்று எண்ணினார். அவர் அதற்காக தனது நடைப்பயணத்தைத்🚶♂️ தொடங்கினார். பல ஊர்களையும்🌆🌇, காடுகளையும்🌾🌾🌵🌵 கடந்து சென்றார். வழியில் காசி விஸ்வநாதரையும் தரிசித்து😇 திருக்கையிலை நோக்கி சென்றார். அவரின் முதுமையால் அவர் காலகள் செயலிழந்தன🦶🏼. ஆனாலும் அவர் தன் பயணத்தை விட்டுவிட இல்லை. மார்பால் தவழ்ந்து சென்றார். குருதி பெருகியது. ஆனாலும் மனவுறுதியுடன் முதுகால் தவழ்ந்து சென்றார். பிறகு சிவபெருமானே முனிவர் வடிவில் வந்து அவருக்கு தரிசனம் இங்கு கிட்டாது என்று கூறியதும், அப்பர் "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்" என்று மறுத்தார். அதற்கு சிவபெருமான் அப்பரிடம் திருக்கையிலை காட்சியைத் திருவையாற்றில் காணுமாறு கூறி அருகிலுள்ள குளத்தில்🏞 மூழ்கி எழுமாறு உரைத்தார். பிறகு அப்பரும் அவ்வாறே செய்தார்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
நம்முள் பலர் ஒரு செயலை ஆரம்பித்தால் அதனை இடையிலே விட்டுவிடுகின்றோம். ஆனால் அப்பர் பெருமானோ திருக்கையிலையில் சிவபெருமானைக் காண வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே முன் நிறுத்தி அதற்காக மன உறுதியுடன் செயல்பட்டார்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
எனவே, அப்பர் பெருமானின் இவ்வாழ்க்கை வரலாறு நம் அனைவருக்கும், எவ்வாறு மனவுறுதியுடன் செயல்பட வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றது.
💐💐💐💐💐💐💐💐💐
No comments:
Post a Comment