Search This Blog

Sunday, 25 October 2020

சிவ லிங்கம் குறித்து சில தகவல்கள்

 சிவலிங்கம்:

💐💐💐💐💐💐

பிரபஞ்சத்தின்‌ அடிப்படையாக இருப்பது பஞ்ச பூதங்கள்‌. இந்த பஞ்ச பூதங்களும்‌ அசையும்‌ சக்தி அசையா சக்தி என்கிற இரண்டு சக்தி மயங்களிலிருந்து உருவானவை. இந்த இரண்டு சக்தி மயங்களே ஆண்‌ பெண்‌ என்கிற இரண்டு பாலாகி உலகத்தின்‌ அனைத்து இயக்கத்திற்கும்‌ அடிப்படையாக இருக்கின்றது. ஆண்‌ மற்றும்‌ பெண்ணின்‌ குறியீடுகளான பிராகிருதி👧🏻 மற்றும்‌ புருஷ்‌👦🏻 ஆகிய இரண்டின்‌ கூட்டாக அமைந்திருப்பது தான்‌ சிவபெருமானின்‌ லிங்க வடிவம்‌. லிங்கம்‌ எனும்‌ சொல்‌ சிவபெருமானின்‌ அருவுருவ நிலையைக்‌ குறிப்பதாகும்‌. லிம்‌ என்பது உயிர்களின்‌ தோற்றத்தைக்‌ குறிக்கும்‌. கம்‌ என்பது அவற்றின்‌ ஒடுக்கத்தைக்‌ குறிக்கும்‌ சொல்லாகும்‌. உயிர்கள்‌ தோன்றுவதற்கும்‌ ஒடுங்குவதற்கும்‌ உரிய இடமாக சிவபெருமான்‌ உள்ளதால்‌ லிங்க உருவம்‌ சிவலிங்கம்‌ என்ற பெயர்‌ பெற்றது. 

----------------

பிரம்மா, விஷ்ணு, உருத்திரன்‌, மகேஸ்வரன்‌, சதாசிவன்‌ என்ற ஐந்து மூர்த்திகளையும்‌ தனது பகுதிகளாக்‌ கொண்டது சிவலிங்கம்‌. இதில்‌ மூன்று பகுதிகள்‌ மட்டுமே கண்ணுக்கு👁 தெரியும்‌. அதன்‌ அடிப்பகுதி படைக்கும்‌ பிரம்மாவைக்‌ குறிக்கிறது. மத்தியப்‌ பகுதி காக்கும்‌ விஷ்ணுவைக்‌ குறிக்கிறது. மேல்‌ பகுதி அழிக்கும்‌ உருத்திரனைக்‌ குறிக்கிறது. மறைத்தல்‌ தொழிலை செய்யும்‌ மகேஸ்வரனும்‌ அருளும்‌ தொழிலை செய்யும்‌ சதாசிவனும்‌ மீதி மூன்று தொழில்களோடு மறைமுகமாக கலந்திருக்கின்றார்கள்.



No comments:

Post a Comment