திருவாசகம் -- திருப்பூவல்லி -- பாடல் 1:🌟
********
இணையார் திருவடிஎன் தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ
*********
🌟விளக்கம்🌟:
இரண்டாகிய அரிய திருவடியை, என் தலையின் மீது வைத்தவுடன், இதுவரையில் துணையென்று நினைத்திருந்த உறவினரெல்லாரையும், விட்டு நீங்கினேன். அணை பொருந்திய நீர் சூழ்ந்த தில்லைநகர்க் கண்ணதாகிய, அம்பலத்தில் ஆடுகின்ற, நமதுபிறவிக் கடலுக்கு ஓர் மரக்கலம்🛶 போல்பவனாகிய சிவபெருமானது பெருமையைப் புகழ்ந்து பாடி அல்லி மலர்களைப்🌷 பறிப்போம்.
கருத்து🌟:
இறைவனது திருவடி ஞானத்தால் உலகப்பற்று அறும் என்பது கூறப்பட்டது.
No comments:
Post a Comment