Search This Blog

Friday, 22 January 2021

பிட்சாடனர்

 🌷பிட்சாடனர்🌷:

⭐⭐⭐⭐⭐

தாருகா வன முனிவர்கள் மற்றும் அவர்களுடைய மனைவியர்கள், கடவுள் கொள்கையில் நம்பிக்கையின்றி, இறைவனை மதியாது, வேள்வியே தெய்வமென மயங்கி நின்றனர். வேத நெறிகளையும் சில கடமைகளையும் மட்டுமே மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர். இறைவனை மதியாத தாருகா வனத்து முனிவர்களை நல்வழிப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட ஈசனார், திருமாலை மோகினி வேடத்தில் வரச்செய்து, தாம் பேரழகு பொலியும் இளைஞனாகக் கோலம் கொண்டு, தாருகாவனத்துள் அழகிய பிச்சாண்டவர் (பிட்சை எடுக்கும் கோலம்) கோலத்தில் சென்றார்.


பிச்சாண்டவரின் வடிவழகைக் கண்ட முனி பெண்டிர் காதல் வயப்பட்டு, தங்கள் கணவர்களை விட்டு விட்டு, பிச்சாண்டவர் பின்னே சென்றனர். மோகினியின் அழகில் முனிவரும் மயங்கிச் சொல்லழிந்து, ஆசைவயப்பட்டு குழம்பினர். அவர்களுக்குச் சுயநினைவு வந்தபோது, தாமும் தம் மனைவியரும் நிற்கும் கோலத்தை உணர்ந்து சீற்றமுற்று, சிவபெருமானை அழிக்க அபிசார வேள்வி இயற்றலாயினர். அதிலிருந்து தோன்றிய புலி🐯, யானை🐘, பாம்பு🐍, சூலம், மான், பூதப்படை, உடுக்கை முதலியவைகளை ஒவ்வொன்றாகச் கொல்லுமாறு ஏவினர். ஆனால் அப்படைகள் பிச்சாண்டவரைக் கொல்லும் ஆற்றல் இல்லாது போய் பிச்சாண்டவருக்கே ஆடையாய், அணியாய், கருவியாய் அடைக்கலம் புகுந்தன. இறுதியாக அவ்வேள்வியில் தோன்றிய முயலகனையும், வேள்வித் தீயையும் ஏவினார்கள். முயலகன் பிச்சாண்டவரின் திருவடியில் அமர்ந்தான். வேள்வித் தீ, ஒரு திருக்கையில் அமர்ந்தது. சிவபெருமான் யாகத்தீயைக் கையிலேந்தித் திருநடம் புரிய, வந்திருப்பது முழுமுதற்பரமே என்றுணர்ந்த முனிவர்கள் தம் தவறுணர்ந்து, நல்லறிவு பெற்று சிவபெருமானை வணங்கினர்😇.



No comments:

Post a Comment