Search This Blog

Thursday, 25 March 2021

Greatness of holy feet of Lord Shiva

 *Thiruvasagam -- The Humming bee -- Song 1*

(The following verses are taken from G.U Pope's English translation of Thiruvasagam)

The King that crowns the flower; Purandaran ; the Lady blest, in beauty clothed,

That sits on learned tongues ; and Naranan ; 

the fourfold mystic Védic Scroll,

The Splendours, Riders in majesty ;—with all the heavenly ones too, know Him not :

Go to His roseate foot who mounts the Bull ; AND BREATHE His PRAISE, THOU HUMMING-BEE

========================

*Explanation*

Manickavasagar instructs a humming bee to go to the holy feet of Lord Shiva which is not known by 

Lord Brahma, 

Lord Vishnu, 

Goddess Saraswathi, 

Lord Rudra, 

Four Vedas, 

Heavenly beings

and sing his glory.

---------------------------

By this, Manickavasagar tells about the *greatness of the holy feet* of Lord Shiva.



சிவபெருமானின் திருவடி பெருமை

 *திருவாசகம் -- திருக்கோத்தும்பி -- பாடல் 1*

🌻🌻🌻🌻🌻🌻

பூவேறு கோனும்‌ புரந்தரனும்‌ பொற்பமைந்த 

நாவேறு செல்வியும்‌ நாரணனும்‌ நான்மறையும்‌

மாவேறு சோதியும்‌ வானவருந்‌ தாமறியாச்‌

சேவேறு சேவடிக்கே சென்றூதாய்‌ கோத்தும்பீ.

🌻🌻🌻🌻🌻🌻

*விளக்கம்*

===========

அரசவண்டே! நீ, பிரமன்‌, இந்திரன்‌, சரசுவதி, திருமால்‌, நான்கு வேதங்கள்‌, முச்சுடர்கள்‌, மற்றைத்‌ தேவர்கள்‌, ஆகிய எல்லாரும்‌ அறிய இயலாத இடபவாகனனாகிய சிவபெருமானது திருவடியிற்‌ சென்று ஊதுவாயாக என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார்.

--------------------

இவ்வாறு மாணிக்கவாசகர், *இறைவன் திருவடியின் பெருமையை* இப்பாடலில் கூறுகின்றார்.



Friday, 19 March 2021

ஓம் சிவாயநம - Om Sivaaya Namah


 

கிரகங்கள் நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? What should we do to prevent the planetary positions affecting us?

அனைத்தையும் இறைவன் திருவடியில் வைத்து சரணடைந்தால் எவ்வித அச்சமும் வேண்டாம் என்றும்; தியானம் சிறப்பாக நிலைத்தால் கிரகங்களுக்கும் மேலான நிலைக்கும் செல்ல கிரகங்கள் நம்மை பாதிக்காது.

-----------------------

When we surrender everything at the feet of the Divine there is no need to have any fear. If a person can achieve a high state of meditation, he or she will be beyond the influence of the planets. So there is no need to fear.



Saturday, 13 March 2021

Don't covet another man's wife

🌸Thirumanthiram🌸 -- First Tantra -- PirarManai Nayavaamai (Not to covet another man's wife) - Song 1:

=============

Aatha manaiyaal agathil irukkavae

Kaatha manaiyaalai kaamurum kaalaiyar

Kaaicha palaavin kaniyunna maataamal

Eecham pazhathukku idarutra vaarae.

=============

Thirumoolar says that if a married man has lust on another man's wife then he can be compared to a man who declines the taste of jackfruit and yearns for the tamer taste of thorny date.

Thirumoolar says that it is wrong to have lust or desire for another man's wife



பிறர் மனைவி மீது ஆசைப்படுதல் கூடாது

🌸திருமந்திரம்🌸 -- முதல் தந்திரம் -- பிறர்மனை நயவாமை -- பாடல் 1:

=============

ஆத்த மனையாள்‌ அகத்தில்‌ இருக்கவே 

காத்த மனையாளைக்‌ காமுறும்‌ காளையர்‌ 

காய்ச்ச பலாவின்‌ கனியுண்ண மாட்டாமல்‌ 

ஈச்சம்‌ பழத்துக்கு இடருற்ற வாறே. 

=============

விளக்கம்‌

🌻🌻🌻🌻🌻

எனக்கு இவள்‌ தான்‌ என்று உறுதிமொழி கூறி திருமணம்‌ செய்த அன்பான மனைவி தமது வீட்டில்‌ இருக்கும்போதே,  மற்றொருவர்‌ திருமணம்‌ செய்து பாதுகாத்து வைத்திருக்கும்‌ மனைவியர்‌ மீது ஆசைப்படும்‌ இளைஞர்கள்‌ தமது வீட்டின்‌ கொல்லைப்புறத்தில்‌ காய்த்து பழுத்துத்‌ தொங்கும்‌ பலாப்‌ பழத்தை சாப்பிட விரும்பாமல்‌ எங்கோ முட்காட்டுச்‌ செடிகளுக்கு நடுவே வளர்ந்து கிடக்கும்‌ ஈச்சம்‌ பழத்தைச்‌ சாப்பிட ஆசைப்படுவது போன்ற முட்டாள்தனம் என்று திருமூலர் கூறுகின்றார்.




Tuesday, 9 March 2021

Rameswaram salt (Uppu) Lingam

In Rameswaram jyotirlinga temple, there is an old lingam which is made of salt behind the main Lingam of the temple. Even after many years, the salt Lingam has not yet dissolved.

Once upon a time, many people argued that main Lingam of the temple was not made of sand and also said that if Lingam was made of sand it would have been dissolved while anointing the Lord.

During that time, a true devotee of Devi Parvati named Bhaskararaayar made a Lingam out of salt and anointed it. But the Lingam did not dissolve. He said that if the Lingam made by him who worship Devi Parvati did not dissolve, then it is of no wonder that the Lingam made by the wife of Lord Vishnu is not dissolved yet. The salt Lingam made by him is present till now.



ராமேஸ்வரம் உப்பு லிங்கம்

இராமேஸ்வரம்‌ கோவிலில்‌ ராமநாதர்‌ சன்னிதிக்கு பின்புறம்‌ உப்புக்கல்லால்‌ செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம்‌ உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால்‌ செய்யப்பட்ட உப்புலிங்கம்‌ கரையாமல்‌ அப்படியே உப்புக்கல்லாகவே இருக்கிறது. 


ஒரு முறை சிலர்‌ ராமேஸ்வரம்‌ கோவிலில்‌ உள்ள லிங்கம்‌ மணலால்‌ ஆனது அல்ல என்றும்‌ அப்படி மணலால்‌ செய்யப்பட்டது என்றால்‌ அபிஷேகத்தின்‌ போது கரைந்திருக்க வேண்டும்‌ என்றும்‌ வாதம்‌ செய்தார்கள்‌. அந்த நேரத்தில்‌ பாஸ்கரராயர்‌ என்ற அம்பாள்‌ பக்தர்‌, தண்ணீரில்‌ எளிதில்‌ கரையும்‌ தன்மையுடைய உப்பில்‌ ஒரு லிங்கம்‌ செய்து அதற்கு அபிஷேகம்‌ செய்தார்‌. ஆனால்‌ அந்த லிங்கம்‌ கரையவில்லை. அம்பாளை வணங்கும்‌ தன்னால்‌ பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும்‌ கடவுளின்‌ மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம்‌ கரையாமல்‌ இருப்பதில்‌ என்ன அதிசயம்‌ இருக்கிறது என்று கூறினார்‌. அவர்‌ செய்த உப்பு லிங்கம்‌ இப்போதும்‌ உள்ளது.



Saturday, 6 March 2021

Lord Shiva's holy feet alone can give us infinite bliss

 Thiruvasagam - 'The wonder of Salvation' -- Song 3:

🌸🌸🌸🌸🌸🌸

Me trusting every lie as truth,—plunged in desire of women’s charms,

He guarded that I perished not with soul perturb’d,—the Lord Supreme, 

On whose left side the Lady dwells! He brought me nigh His jewell’d feet,-

Twas thus my Guru gave me grace: O RAPTURE! who so BLEST AS I?

(The above verses are taken from G.U Pope's English translation of Thiruvasagam)

🌸🌸🌸🌸🌸🌸

EXPLANATION:

============

Manickavasagar says that Lord Shiva will protect the people who thinks the unreal world to be real and go behind the Sensual pleasures. Also, he helps us to attain his holy feet and enjoy the infinite bliss.



இறைவன் பேரின்பத்தை அருள்வார்

திருவாசகம் -- அச்சோப் பதிகம் -- பாடல் 3:

🌸🌸🌸🌸🌸🌸

பொய்யெல்லாம்‌ மெய்யென்று புணர்முலையார்‌ போகத்தே 

மையலுறக்‌ கடவேனை மாளாமே காத்தருளித்‌ 

தையலிடங்‌ கொண்டபிரான்‌ தன்கழலே சேரும்வண்ணம்‌ 

ஐயன்‌எனக்‌ கருளியவா றார்பெறுவார்‌ அச்சோவே

🌸🌸🌸🌸🌸🌸

விளக்கம்:

==========

பொய்யை மெய் என்று கருதி மாதர்‌ இன்பத்தில்‌ மயங்கி நின்ற நம்மை, அழியாமல்‌ காத்தருளித்‌ தனது திருவடியை அடைந்து பேரின்பம் நுகருமாறு  இறைவன்‌ அருள்‌ பாலித்தார். 

============

இறைவன் பேரின்பத்தை அருள வல்லவர் என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார்.