Search This Blog

Friday, 2 April 2021

இறைவன் திருவடி இன்பம் அழியாத் தன்மை உடையது

 🌻திருவாசகம்🌻 -- திருக்கோத்தும்பி -- பாடல் 3:

*********

தினைத்தனை உள்ளதோர்‌ பூவினில்தேன்‌ உண்ணாதே

நினைத்தொறுங்‌ காண்தொறும்‌ பேசுந்தொறும்‌ எப்போதும்‌

அனைத்தெலும்‌ புள்நெக ஆனந்தத்‌ தேன்சொரியுங்‌ 

குளிப்புடை யானுக்கே சென்றூதாய்‌ கோத்தும்பீ.

*********

விளக்கம்:


பூவிலுள்ள தேனைத்‌🍯 “தினையளவு' என்றது, “உலக🌏 இன்பம்‌ சிறிது” என்பதையும்‌, இறைவனது கூத்தினை, “தேன்மழை” என்றது, “இறையின்பம்‌ அளவற்றது” என்பதையும்‌ மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார்.


இதனால்‌, இறைவன்‌ திருவடி இன்பம்‌ அழியாத்‌ தன்மை உடையது என்பது கூறப்பட்டது.



No comments:

Post a Comment