திருமந்திரம் -- 8ம் தந்திரம் -- ஞானி செயல் -- பாடல் எண் 2611:
⭐️⭐️⭐️⭐️⭐️
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனருளாலே.
⭐️⭐️⭐️⭐️⭐️
விளக்கம்:
🌻🌻🌻🌻🌻
தன்னை அறிந்தால் கடவுளை அறியலாம், உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் அறிவதே தன்னை அறிவதாகும். அதுவே ஞானமாகும். தத்துவஞானம் என்பது உண்மையை அறிவது என்று பொருள்படும். சென்னியில் வைத்த சிவபெருமான் அருள் என்று குறிப்பிடுவது உச்சந்தலையில் இருக்கும் சகஸ்ரார யோக நிலையாகும். இந்த யோகநிலையில் இறைநிலையை உணர்ந்த ஞானிகள், தங்களுடன் வந்த வினைகளையும், இனி வரும் வினைகளையும் அறுத்து இறைவனின் திருவடிசேர்வார்கள், அவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்கிறார் திருமூலர் சித்தர்.
No comments:
Post a Comment