இயமம், எட்டுப் பகுதிகளைக் கொண்ட அட்டாங்க யோகத்தில் ஒரு பகுதி ஆகும்.
✨இயமம்: தீமைகளைப் போக்குவது.✨
இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன:
1⃣ மனதாலும், பேச்சாலும், செயலினாலும் எந்த உயிரையும் துன்புறுத்தாமை.
2⃣ மனதாலும், பேச்சாலும், செயலினாலும் பிறர் பொருளைக் களவாடாமை.
3⃣ மனதாலும், பேச்சாலும், செயலினாலும் முழு பிரம்மச்சரியம் கடைப்பிடித்தல்.
4⃣ மனதாலும், பேச்சாலும், செயலினாலும் உண்மையைப் பின்பற்றுதல்.
5⃣ பிறர் கொடுக்கும் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளாமை. (ஆசைப் படாமலிருத்தல்)
இதனைக் கடைபிடித்தால் நம்மிடமுள்ள அனைத்து தீமைகளும் விலகும்.
No comments:
Post a Comment