Search This Blog

Saturday, 20 February 2021

மரணத்தைப் பற்றிய நினைவு

சூரியனிடத்திருந்து🌝 இருளைக்காண முடியாது. பகவத்‌ சிந்தனையில்‌ ஆழ்ந்திருப்பவர்‌ உள்ளத்தில்‌ மரணத்தைப்‌ பற்றிய நினைவு வருவதில்லை. 

அப்பர்‌ சுவாமிகளுக்கு மெய்யுணர்வு வந்த பொழுது மதம்‌ மாறினார்‌. அதைக்‌ குறித்துப்‌ பழைய மதவாதிகள்‌ அவரைப்‌ படாதபாடு படுத்‌தினர்‌. அவரைக்‌ கொல்ல முயன்றனர்‌. கடவுள்‌ எண்ணத்திலேயே நிலைத்திருந்த அவருக்கு மரணத்தைப்‌ பற்றிய நினைவே வரவில்லை. 

=================

யார்‌ கடவுளை எப்பொழுதும் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்களோ அவர்‌ மரண நினைவைக்‌ கடந்து விடுகின்றனர்‌.



Monday, 15 February 2021

Badava Lingam (படவ லிங்கம்)

 படவ லிங்கம்:

🌻🌻🌻🌻🌻🌻

கர்நாடக மாநிலம்‌ ஹம்பியில்‌ லட்சுமி நரசிம்மர்‌ கோயிலுக்கருகில்‌ 9 அடி உயரமுள்ள இந்த படவலிங்கம்‌ அமைந்துள்ளது. ஒற்றைக்‌ கருங்கல்லில்‌ வடிக்கப்பட்டுள்ள இந்த லிங்கத்தில்‌ மூன்று கண்கள்‌ செதுக்கப்பட்டுள்ளன. இது சிவபெருமானின்‌ மூன்று கண்களாக கருதப்படுகின்றன. இது ஹம்பியிலுள்ள லிங்கங்களுள்‌ மிகப்‌ பெரியதாகும்‌. ஒரு ஏழை விவசாயப்‌ பெண்‌ இதனைக்‌ கட்டியதாக வரலாறு உள்ளது. லிங்கம்‌ உள்ள அறை வழியாக ஒரு வாய்க்கால்‌ செல்வதால்‌ லிங்கத்தின்‌ அடிப்பகுதி நீரால்‌ சூழப்பட்டு அவ்வறையில்‌ எப்பொழுதும்‌ ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நீர்‌ உள்ளது.

---------------------------------------------

Badava Lingam:🌻🌻

*************

Badavalinga temple is located in Hampi, Karnataka of India. The Lingam is 9ft tall. The monolithic lingam has a three eye mark drawn on it. It depicts the three eyes of Lord Shiva. History tells that it was built by a poverty stricken peasant woman. The Lingam always stands on a bed of water. This is because a water channel flows through the chamber



Saturday, 13 February 2021

Avoiding Non vegetarian foods

THIRUMANTHIRAM -- First Tantra --

(Non consumption of non vegetarian diet)

⭐️⭐️⭐️⭐️⭐️

Kolaiyae kalavugal kaamam poikooral

Malaivaana paadhaga maamavai neeki

Thalaiyaan sivanadi saarndhinpan saarndhorku

Illaiyaam ivaignaanaa nandha thiruthalae

⭐️⭐️⭐️⭐️⭐️

EXPLANATION:

-----------------

1️⃣ Killing other living beings 


2️⃣Stealing others belongings


3️⃣Drinking alcohol which allures our intellect 


4️⃣Having lust on women 


5️⃣Speaking lies


These five are the greatest sins which a human can commit 

Thirumoolar says if one doesn't commit those sins and always think of God's holy feet then they will always receive the infinite bliss which comes from the knowledge of God.



அசைவம் சாப்பிடாமல் இருத்தல்

திருமந்திரம் -- முதல் தந்திரம் -- புலான் மறுத்தல்

(அசைவம்‌ சாப்பிடாமல்‌ இருத்தல்‌] 

🌻🌻🌻🌻🌻

கொலையே களவுகள்‌ காமம்‌ பொய்கூறல்‌ 

மலைவான பாதக மாம்‌அவை நீக்கித்‌ 

தலையாஞ்‌ சிவனடி சார்ந்தின்பஞ்‌ சார்ந்தோர்க்‌ 

கிலையாம்‌ இவைஞானா னந்தத்‌ திருத்தலே

🌻🌻🌻🌻🌻

விளக்கம்‌

***********

1️⃣ பிற உயிர்களைக்‌ கொல்லுதல்‌🔪


2️⃣ பிறரின்‌ பொருட்களைத்‌ திருடுதல்‌


3️⃣ புத்தியை மயக்கும்‌ கள்ளை குடித்தல்‌ (மது அருந்துதல்‌🍺)


4️⃣ பெண்களின்‌ மேல்‌ காம வயப்படுதல்‌ 


5️⃣ பொய்‌ பேசுதல்‌ 


ஆகிய இந்த ஐந்தும்‌ உயிர்கள்‌ செய்யக்கூடிய பாவங்களிலேயே மிகவும்‌ பெரிய பாவங்களாகும்‌. 

இந்த பாவங்களைச்‌ செய்யாமல்‌ இறைவனது திருவடிகளைத்‌ தனது சிந்தனையில்‌ வைத்து இறைவனைப்‌ பற்றிய எண்ணங்களிலேயே திளைத்து இருப்பவர்களுக்கு, பேரறிவு ஞானத்தினால்‌ விளங்கும்‌ பேரின்பம்‌ எப்போதும்‌ கிடைக்கும்‌.



Tuesday, 9 February 2021

நடராஜர்

 இடது: சிதம்பர நடராஜர்

வலது: மதுரை நடராஜர்



Friday, 5 February 2021

THIRUVASAGAM -- The Sacred Lily Flowers

THIRUVASAGAM -- The Sacred Lily Flowers -- Song 3:

(The following verses are taken from G.U Pope's English translation of Thiruvasagam)

===========

Us too, than dogs more vile, of worth and note He made to be;

With greater than a mother’s tenderness, our Perumaan 

Cut off ‘illusive birth,’ made us His own; our ‘deeds’ so strong 

Laid prostrate humbled in the dust ; PLUCK WE THE LILY-FLOWERS 

=============

EXPLANATION:

Our mother would show us affection in this birth alone. But God has been with us throughout our previous births and has been helping us. So Manickavasagar mentions God as 'Greater than a mother's tenderness'. So God due to his mercy, bestows his grace upon us. By God's grace, our deeds (which are the cause of birth and death) will get destroyed.



திருவாசகம் -- திருப்பூவல்லி

திருவாசகம் -- திருப்பூவல்லி -- பாடல் 3:

🌹🌹🌹🌹🌹

நாயிற்‌ கடைப்பட்ட நம்மையுமோர்‌ பொருட்படுத்துத்‌ 

தாயிற்‌ பெரிதுந்‌ தயாவுடைய தம்பெருமான்‌ 

மாயப்‌ பிறப்பறுத்‌ தாண்டான்‌என்‌ வல்வினையின்‌ 

வாயிற்‌ பொடியட்டிப்‌ பூவல்லி கொய்யாமோ.

🌹🌹🌹🌹🌹

விளக்கம்:

==========

தாய்‌👩‍👧 ஒரு பிறவியில்‌ கருணை காட்டி உதவுபவள்‌; இறைவனோ, எல்லாப்‌ பிறவிகளிலும்‌ தோன்றாத்‌ துணையாய்‌ இருந்து கருணை காட்டி உதவுபவர். ஆதலின்‌, "தாயிற்‌ பெரிதுந்‌ தயாவுடைய தம்‌ பெருமான்‌" என்றார்‌. குருவருளால்‌ பழவினைகள்‌ செயலற்று ஒழிந்தமையின்‌, "வினையின்‌ வாயிற்பொடியட்டி" என்று நகைச்சுவைபடக்‌ கூறினார்‌😇. 

================

இதனால்‌, இறைவன்‌ அருளால்‌ வினைகள்‌ அழியும்‌ என்பது கூறப்பட்டது.

================