Search This Blog

Thursday, 12 August 2021

கவலையைக் கொண்ட நம் வாழ்க்கை

ஓயாதோ என்கவலை உள்ளே ஆனந்தவெள்ளம்‌ 

பாயாதோ ஐயா பகராய்‌ பராபரமே. 

                                  -தாயுமானவர்


விளக்கம்‌: 

⭐️⭐️⭐️⭐️⭐️

கவலையுற்றிருப்பது😔 ஜீவாத்மாக்களின்‌ இயல்பு. பிரபஞ்ச வாழ்க்கையில்‌ ஈடுபட்டிருக்கும்‌ வரையில்‌ கவலைக்கு ஒரு முடிவு இல்லை. பிறவிதோறும்‌ கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்ற மானுடன்‌ பரமனை நாடிக்‌ கவலைப்படுவானாகில்‌ அவன்‌ பாக்கியவானாகிறான்‌. கடலில்‌ அலைகள்‌🌊 எழுவது போன்று உள்ளத்தில்‌ கவலைகள்‌ எழுந்துகொண்டிருக்கின்றன. அவைகள்‌ உள்ளத்தினுள்ளே இருக்கின்ற பேரானந்தத்தை மறைக்கின்றன. அத்தகைய கவலையை ஒழித்துத்‌ தள்ளுவது மிகக்‌ கடினம்‌☹️. ஒதுக்குதற்குப்‌ பதிலாக உலகக்‌ கவலைகளை அருள்துறைக்கு உரிய கவலையாக மாற்றுவது மிகச்‌ சுலபம்‌. அதுவும்‌ கவலைதானே என்னும்‌ ஐயம்‌ எழலாம்‌. ஆனால்‌ கடவுளைக்‌ குறித்துக்‌ கவலைப்படுகின்ற அதே வேளையில்‌ ஆனந்தமும்‌😇 உருவெடுக்கின்றது. இதை ஆத்மசாதகன்‌🧘🏻‍♂ தன்‌ அனுபவத்தில்‌ கண்டுகொள்ள முடியும்‌.



Life full of distress

Will not my distress end? 

Will not the Waters of Bliss flow into me? 

My Lord, 

Oh Para Param! 

                              -Thaayumanavar


Explanation:

⭐️⭐️⭐️⭐️⭐️

The jiva which is entangled in this worldly always suffers from misery😔. And this misery has no end till the worldly life ends. He who suffers in this worldly life to reach the holy feet of God is really blessed😇. Like the waves🌊 which arise in the sea, endless misery arise in all our minds. These obscure the infinite bliss in all our hearts. So to remove these sufferings is very difficult😰. But it is easier to change the direction of these sufferings. Once we suffer for the sake of attaining God, there will be happiness of freedom😃. This is felt by the person who practices spiritual sadhanas🧘🏻‍♂.



எல்லாம் வல்ல சிவபெருமானைப் போற்றி! போற்றி!✨✨ ------------------ Let us all praise the almighty Lord Shiva 🌟🌟

 


Wednesday, 4 August 2021

 ✨ஓம் சிவாயநம🌻

----------------------

✨Om Sivaaya Namah 🌻



Saturday, 31 July 2021

Manickavasagar praising the grace of Lord Shiva

Thiruvasagam -- The Wonder of Salvation -- Song 1:

*******

(The following verses are taken from G.U Pope's English translation of Thiruvasagam)

To me, who toiled and moiled ’mid fools, that knew not way of final peace, 

He taught the way of pious love ;—and that ‘old deeds’ might cease and flee, 

Purging the foulness of my will, made me pure bliss, took for His own ;

’Twas thus the FATHER gave me grace: O RAPTURE! WHO SO BLEST AS I?'

*******

Explanation:

✨✨✨✨✨

Manickavasagar says that Lord Shiva helps people like us who mingle with those who doesn't know the path of liberation, by showing us the path of devotion. He not only does this but also he makes us one of his own by his grace. This makes Manickavasagar to wonder about the grace of Lord.



மாணிக்கவாசகர் இறைவனின் திருவருளைப் போற்றுதல்

திருவாசகம் -- அச்சோப் பதிகம் -- பாடல் 1:

⭐️⭐️⭐️⭐️⭐️

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்‌ 

பத்திநெறி அறிவித்துப்‌ பழவினைகள்‌ பாறும்வண்ணஞ்‌ 

சித்தமலம்‌ அறுவித்துச்‌ சிவமாக்கி எனை ஆண்ட 

அத்தன்‌எனக்‌ கருளியவா றார்பெறுவார்‌ அச்சோவே

⭐️⭐️⭐️⭐️⭐️

விளக்கம்:

✨✨✨✨✨

"முத்தி வழியை அறியாத மூர்க்கரோடு கூடி அவர்‌ வழியில்‌ முயல்கின்ற எனக்குப்‌ பக்தி வழியை அறிவித்து, என்‌ பழவினைகள்‌ ஓடும்படி🏃‍♂ மனமாசு அகற்றிச்‌ சிவ வடிவமாக்கி என்னை ஆண்டருளினார், எமது தந்தையாகிய சிவபெருமான்‌. அப்பெருமான்‌ அருள்‌ செய்த பேற்றைப்‌ பெற வல்லவர்‌ வேறு யாவர்‌?" என்று மாணிக்கவாசகர் இறைவனின் திருவருளை வியந்துப் போற்றுகிறார்.



⭐️மார்க்கண்டேஸ்வரர் திருக்கோயில், குருக்ஷேத்திரம், அரியானா⭐️ ------------------ ⭐ Sri Markandeswarar temple, Kurukshetra, Haryana state of India⭐