திருக்கயிலை மலைக்கு காரைக்கால் அம்மையார் சென்றபோது சிவபெருமானின் இருப்பிடம் என்பதால் தன் பாதம் கயிலையில் பட்டுவிடக் கூடாது எனக் கருதி தலை கீழாக கைகளால் நடந்து கையிலை மலை ஏறினார். அம்மையார் கஷ்டப் பட்டு மலையேறுவதைக் கண்டு கசிந்துருகிய பார்வதி தேவி சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமானின் உத்தரவின் பெயரில் விநாயகர் தன் துதிக்கையால் அம்மையாரைத் தூக்கி அம்மையப்பர் முன் நிறுத்தினார். "இவர் யார் " என தேவி கேட்க, "இவர் தான் எம் அம்மை" எனக்கூறி "அம்மையே வருக, வந்தமர்க" என சிவபெருமான் வரவேற்று அமரச் செய்தாராம்.
அதனால் தான் கோவில்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரிசையில் காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த நிலையில் இருப்பதைக் காணலாம்.
*திருச்சிற்றம்பலம்*
No comments:
Post a Comment