Search This Blog

Monday, 31 May 2021

The beauty of joining his name with Tamil

It was Thirugnanasambandhar who mentioned his name along with the word 'Tamizh'.

He has mentioned like this in more than 40 places.

He has understood the Tamizh language deeply.


He has mentioned like:


Tamil Gnanasambandhan

Marai Gnanasambandhan

Kalai Gnanasambandhan

Tamil Viragan

Natramil Gnanasambandhan 

Tamilkezhu Viraginan

Tamilnadu Sambandhan

Sentamizh Viragan

Tamil kizhamai Gnaanan

Tamilnathan Sambandhan

Isai Gnanasambandhan 

Tamizhaagaran

Iyal Gnanasambandhan 


By mentioning 'Tamizh' before his name, Thirugnanasambandhar established unity based on language.



தமிழோடு தன்னைச் சேர்த்து இயம்பிய அழகு

முதல்‌ முதலில்‌ தமிழுடன்‌ தமது பெயரைச்‌ சேர்த்து எழுதியவர்‌ திருஞானசம்பந்தர்‌

தமிழ்‌ ஞானசம்பந்தன்‌ என்று நாற்பதுக்கும்‌ மேற்பட்ட இடங்களில்‌ குறிப்பிட்டுள்ளார்‌. 


தமிழ்‌ ஞானசம்பந்தன்‌. 

மறை ஞானசம்பந்தன்‌. 

கலை ஞானசம்பந்தன்‌. 

தமிழ்‌ ஞானசம்பந்தன்‌. 

தமிழ்‌ விரகன்‌. 

நற்றமிழ்‌ ஞானசம்பந்தன்‌. 

தமிழ்கெழு விரகினன்‌. 

தமிழ்நாடு சம்பந்தன்‌. 

செந்தமிழ்‌ விரகன்‌. 

தமிழ்கிழமை ஞானன்‌. 

தமிழ்நாதன்‌ ஞானசம்பந்தன்‌. 

இசை ஞான சம்பந்தன்‌. 

தமிழாகரன்‌. 

இயல்‌ ஞானசம்பந்தன்‌. 


தம்‌ பெயருக்கு முன்னே தமிழ்‌ என்று எழுதி மொழியால்‌ ஒற்றுமை வளர வித்தவர்‌ 

தமிழாகரர்‌ திருஞானசம்பந்தர்.



Friday, 28 May 2021

Work of a Sage

Thirumanthiram -- 8th Tantra -- The work of Sage (Gnaani seyal) -- Song no. 2611:

⭐️⭐️⭐️⭐️⭐️

Thannai arindhidum thathuva gnaanigal

Munnai vinaiyin mudichai avizhpargal

Pinnai vinaiyai pidithu pisaivargal

Senniyil vaitha sivanarulaalae

⭐️⭐️⭐️⭐️⭐️

Explanation:

🌻🌻🌻🌻🌻

If we know about ourselves, we can know about God. 'Knowing about ourselves' means knowing about the atman and the body. This is Knowledge. The Knowledge of Tattva means knowing the truth. The sages who reach the Sahasrara chakra by activating it and realizes the God, will destroy the good and bad deeds which come with them and they will reach the holy feet of God. So Thirumoolar says for those sages there is no rebirth.


ஞானியின் செயல்

திருமந்திரம்‌ --  8ம்‌ தந்திரம்‌ -- ஞானி செயல் -- பாடல்‌ எண்‌ 2611:

⭐️⭐️⭐️⭐️⭐️

தன்னை அறிந்திடும்‌ தத்துவ ஞானிகள்‌ 

முன்னை வினையின்‌ முடிச்சை அவிழ்ப்பர்கள்‌ 

பின்னை வினையைப்‌ பிடித்துப்‌ பிசைவர்கள்‌ 

சென்னியில்‌ வைத்த சிவனருளாலே. 

⭐️⭐️⭐️⭐️⭐️

விளக்கம்:

🌻🌻🌻🌻🌻

தன்னை அறிந்தால்‌ கடவுளை அறியலாம்‌, உடம்பைப் பற்றியும்‌, உயிரைப் பற்றியும்‌ அறிவதே தன்னை அறிவதாகும்‌. அதுவே ஞானமாகும்‌. தத்துவஞானம்‌ என்பது உண்மையை அறிவது என்று பொருள்படும்‌. சென்னியில்‌ வைத்த சிவபெருமான்‌ அருள்‌ என்று குறிப்பிடுவது உச்சந்தலையில்‌ இருக்கும்‌ சகஸ்ரார யோக நிலையாகும்‌. இந்த யோகநிலையில்‌ இறைநிலையை உணர்ந்த ஞானிகள்‌, தங்களுடன்‌ வந்த வினைகளையும்‌, இனி வரும்‌ வினைகளையும்‌ அறுத்து இறைவனின்‌ திருவடிசேர்வார்கள்‌, அவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்கிறார்‌ திருமூலர்‌ சித்தர்‌.


Learn to be silent

 A devotee went to the temple. He had banana, coconut, camphor in his basket for giving it to the God.

Coconut began to speak that he is the hardest and biggest among the three. Banana said that he is the youngest and sweetest among the three. But the camphor maintained silence. The devotee reached the sanctum sanctorum. The Coconut 🥥 was broken. Banana 🍌was peeled off. But camphor burnt brightly for sometime then disappeared. 

So we must learn a lesson from this. If we are arrogant like coconut 🥥 then we too will get broken down one day. Like banana, even if we are sweet, if we speak about our pride then we might also get torn apart. But if we are silent like camphor, then we can shine brightly and in the end we shall merge with the holy light of God.


அமைதியாக இருத்தல்

பக்தன்‌ ஒருவன்‌ கோயிலுக்குச்‌ சென்றான்‌. அவனது கூடையில்‌ ஆண்டவனுக்குச்‌ சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம்‌🍌 தேங்காய்‌🥥 கற்பூரம்‌ இருந்தது. 


தேங்காய்‌ பேச ஆரம்பித்தது நம்‌ மூவரில்‌ நானே கெட்டியானவன்‌ பெரியவனும்கூட என்றது. அடுத்து வாழைப்பழம்‌ நமது மூவரில்‌ நானே இளமையானவன்‌ இனிமையானவன்‌ என்று பெருமைப்பட்டுக்‌ கொண்டது. கற்பூரமோ எதுவும்‌ பேசாமல்‌ மெளனம்‌ காத்தது. பக்தன்‌ சந்நிதியை அடைந்தான்‌. தேங்காய்‌ உடைபட்டது. பழத்தோல்‌ உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம்‌ ஏற்றியதும்‌ ஒளிவிசி பிரகாசித்து சிறிது நேரத்தில்‌ கரைந்து ஒன்றும்‌ இல்லாமல்‌ போனது.


பக்தர்களாகிய நாம்‌ இதிலிருந்து ஒன்றை நன்றாகப்‌ புரிந்து கொள்ள வேண்டும்‌. நாம்‌ தேங்காய்‌ போல்‌ கர்வத்துடன்‌ இருந்தால்‌ ஒருநாள்‌ நிச்சயம்‌ உடைபடுவோம்‌. இனிமையாக இருந்தாலும்‌ வாழைப்பழம்‌ போல்‌ தற்பெருமை பேசித்‌ திரிந்தால்‌ ஒருநாள்‌ கிழிபடுவோம்‌. கற்பூரம்‌ போல்‌ அமைதியாக இருந்துவிட்டால்‌ இருக்கும்‌ வரை ஓளிவீசி இறுதியில்‌ மீதமின்றி இறைவனோடு இரண்டறக்‌ கலந்து போவோம்‌. 


கற்பூரம்‌ போல்‌ அமைதியாக இருந்துவிட்டால்‌ இருக்கும்‌ வரை ஒளிவீசி இறுதியில்‌ மீதமின்றி இறைவனோடு இரண்டறக்‌ கலந்து போவோம்‌.



Wednesday, 19 May 2021

Don't waste time in reaching the holy feet of Lord Shiva

 Thiruvasagam -- The Pilgrim Song -- Song 5:

⭐️⭐️⭐️⭐️⭐️

(The following verses are taken from G.U Pope's English translation of Thiruvasagam)


Free ye your souls from pains of wrath and lust; henceforth the time shall not be long drawn out ! 

Beneath our Master’s feet with glad acclaim that we in one may go, in one combine ! 

Even we in Civan’s town shall refuge find, whose flow’r-wreath’d gates to us shall not be clos’d! 

There enter’d we in ecstasy shall sing the glories only of Bhuyangan-king.

⭐️⭐️⭐️⭐️⭐️

==========

Explanation 

==========

There is no more time for us to waste. So before the gates of Sivaloka (abode of Lord Shiva) closes, let us free ourselves from the wrath and lust. Prepare yourself to reach the holy feet of Lord Shiva. Let us all praise the glories of Lord who is wearing a snake around his neck and who is ruling all of us. By this, we can reach the abode of Lord Shiva. 


In the above song, Manickavasagar tells us not to waste any more time in reaching the holy feet of Lord Shiva.



காலம் தாழ்த்தாமல் இறைவன் திருவடிகளை அடைய வேண்டும்

திருவாசகம் -- யாத்திரைப் பத்து -- பாடல் 5:

⭐️⭐️⭐️⭐️⭐️

விடுமின்‌ வெகுளி வேட்கைநோய்‌ மிகவோர்‌ காலம்‌ இனியில்லை 

உடையான்‌ அடிக்கீழ்ப்‌ பெருஞ்சாத்தோ டுடன்போ வதற்கே ஒருப்படுமின்‌

அடைவோம்‌ நாம்போய்ச்‌ சிவபுரத்துள்‌ அணியார்‌ கதவ தடையாமே 

புடைபட்‌ டுருகிப்‌ போற்றுவோம்‌ புயங்கன்‌ ஆள்வான்‌ புகழ்களையே.

⭐️⭐️⭐️⭐️⭐️

விளக்கம்:

------------

மேன்மைப்படுவதற்கு இனிமேல் ஒருகாலம் கிடையாது. ஆகையால் சிவலோகத்தின் அழகிய கதவு நமக்கு அடைக்கப்படாதிருக்கும்படி கோபத்தையும் காம நோயையும் விட்டு விடுங்கள். நம்மை உடைய பெருமானுடைய திருவடிக்கீழ் பெரிய கூட்டத்தோடு உடன் செல்வதற்கு மனம் இசையுங்கள். பாம்பை அணிந்தவரும் நம்மை ஆள்பவருமாகிய இறைவனுடைய பெருமைகளை எங்கும் சூழ்ந்து மனமுருகிப் போற்றுவோம். போற்றினால் சிவலோகத்தில் நாம் போய்ச் சேர்ந்து விடுவோம்.

--------------

இறைவன் திருவடி சேர்வதற்குக் காலம் தாழ்த்தக்கூடாது என்பது கூறப்பட்டது.

--------------


ஓம் சிவாயநம (Om Sivaaya Namah)

 ஓம் சிவாயநம

=============

இறைவன் மட்டுமே மெய் (உண்மை), மற்றவை அனைத்தும் பொய் என்பதை உணர்ந்து இறைவன் திருவருளாலே அவர் திருவடிகளை அடைவோமாக.

-----------------------------

Om Sivaaya Namah 

================

'God is the only truth, rest all are untruth'. By realizing the above truth, let us all reach the holy feet of God by his grace.



Tuesday, 11 May 2021

The Knowledge of Atman

The Knowledge of Atman refers to the Knowledge attained according to every individual's capacity. Till date, nobody could exactly describe the Knowledge of Atman. It is because if the man lives for 100 years, the Knowledge of Atman exists for more than million years.


The description about the Knowledge of Atman is like the blind people describing about the elephant after touching it. The one who touched the elephant's leg will describe it as a pillar. The one who touched the elephant's ear will describe it as a winnow. The both are true in their aspect. But the leg and the ear alone doesn't become an elephant. In the same way, everybody has seen only a part of the Knowledge of Atman.


ஆத்ம ஞானம்

ஆத்ம ஞானம்‌ என்பது அவரவர்களால்‌ அறியப்படுகிற ஒரு பொருள்‌. இன்று வரை யாராலும்‌ அதைப்பற்றி முழுவதுமாக சொல்ல முடியவில்லை. சொல்ல முடியாததன்‌ காரணம்‌ மனிதன்‌ நூறு வருடங்கள்‌ வாழ்கிறான்‌ என்றால்‌ ஆன்மாவின்‌ தத்துவமோ கோடிக்கணக்கான வருடங்களாக இந்த உலகத்தில்‌ வாழ்கிறது. 


ஆத்ம ஞானத்ததைப்‌ பற்றி கருத்துக்கள்‌ சொல்வது குருடர்கள்‌ யானையைத்‌🐘 தொட்டு தடவிப்‌ பார்த்து தங்களது கருத்துக்களை சொல்வது மாதிரி தான்‌ இருக்கும்‌. யானையின்‌ காலைத்‌ தொட்டு பார்த்தவன்‌ தூண்‌ மாதிரி இருப்பதாகச்‌ சொல்வான்‌. அதன்‌ காதை தொட்டு பார்த்தவன்‌ முறம்‌ மாதிரி இருப்பதாகச்‌ சொல்வான்‌. காதை தொட்டுப்‌ பார்த்தவன்‌ சொல்வதும்‌ நிஜம்தான்‌. காலை தொட்டுப்‌ பார்த்தவன்‌ சொல்வதும்‌ நிஜம்தான்‌. ஆனால்‌ காதும்‌ காலும்‌ மட்டும்‌ யானையாகாது. அவர்கள்‌ கண்டது ஆத்ம ஞானத்தின்‌ ஒரு பகுதி மட்டுமே.


Friday, 7 May 2021

Sun prayer (சூரிய வழிபாடு)

 திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் காலை சூரிய🌝 உதயத்தின் போது பிரம்மபுரீஸ்வரருக்கு சூரிய வழிபாடு நடைபெறும் காட்சி. இதுபோல் வருடத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து சூரிய வழிபாடு நடக்கும்.

===========================

Thirupattur Brahmapureeswarar temple:

During sunrise, one can see sun prayer to Brahmapureeswarar taking place in the temple. This kind of prayer takes place for three continuous days in a year.