Search This Blog

Saturday, 31 July 2021

Manickavasagar praising the grace of Lord Shiva

Thiruvasagam -- The Wonder of Salvation -- Song 1:

*******

(The following verses are taken from G.U Pope's English translation of Thiruvasagam)

To me, who toiled and moiled ’mid fools, that knew not way of final peace, 

He taught the way of pious love ;—and that ‘old deeds’ might cease and flee, 

Purging the foulness of my will, made me pure bliss, took for His own ;

’Twas thus the FATHER gave me grace: O RAPTURE! WHO SO BLEST AS I?'

*******

Explanation:

✨✨✨✨✨

Manickavasagar says that Lord Shiva helps people like us who mingle with those who doesn't know the path of liberation, by showing us the path of devotion. He not only does this but also he makes us one of his own by his grace. This makes Manickavasagar to wonder about the grace of Lord.



மாணிக்கவாசகர் இறைவனின் திருவருளைப் போற்றுதல்

திருவாசகம் -- அச்சோப் பதிகம் -- பாடல் 1:

⭐️⭐️⭐️⭐️⭐️

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்‌ 

பத்திநெறி அறிவித்துப்‌ பழவினைகள்‌ பாறும்வண்ணஞ்‌ 

சித்தமலம்‌ அறுவித்துச்‌ சிவமாக்கி எனை ஆண்ட 

அத்தன்‌எனக்‌ கருளியவா றார்பெறுவார்‌ அச்சோவே

⭐️⭐️⭐️⭐️⭐️

விளக்கம்:

✨✨✨✨✨

"முத்தி வழியை அறியாத மூர்க்கரோடு கூடி அவர்‌ வழியில்‌ முயல்கின்ற எனக்குப்‌ பக்தி வழியை அறிவித்து, என்‌ பழவினைகள்‌ ஓடும்படி🏃‍♂ மனமாசு அகற்றிச்‌ சிவ வடிவமாக்கி என்னை ஆண்டருளினார், எமது தந்தையாகிய சிவபெருமான்‌. அப்பெருமான்‌ அருள்‌ செய்த பேற்றைப்‌ பெற வல்லவர்‌ வேறு யாவர்‌?" என்று மாணிக்கவாசகர் இறைவனின் திருவருளை வியந்துப் போற்றுகிறார்.



⭐️மார்க்கண்டேஸ்வரர் திருக்கோயில், குருக்ஷேத்திரம், அரியானா⭐️ ------------------ ⭐ Sri Markandeswarar temple, Kurukshetra, Haryana state of India⭐


 

Tuesday, 20 July 2021

Lord Naageswarar (நாகேஸ்வரர்)

வாரணாசியில்‌ உள்ள 45 அடி ஆழத்தில்‌ உள்ள நாக தீர்த்தத்தில்‌ வருடத்தின்‌ சில குறிப்பிட்ட நாட்களில்‌ மட்டும்‌ நீர்‌ உள்வாங்கி அங்குள்ள நாகேஸ்வரர்‌ தரிசனம்‌ கொடுக்கிறார்‌.

==================

Naageswarar Lingam is located 45 feet deep in Naaga theertham, Varanasi. The Lingam can be seen only on particular days in a year when the water level decreases.



In and Out

 Oh Lord! Who is omnipresent, who is glowing inside and outside of us, please help us to realize you within ourselves by your grace.

If our mind is good, world appears to be good. If the mind is corrupted, the world seems to be corrupted. Our main aim is to make the mind pure. Everything outside us seems to be good to the extent to which our minds are pure.



உள்ளும் புறமும்

எங்கும்‌ நிறைபொருளே, நீ என்‌ உள்ளும்‌ புறமும்‌ ஓயாது ஒளிர்கின்றாய்‌, என்‌ உள்ளத்தினுள்‌ உன்னை நான் உணர நீ அருள்‌ புரிவாயாக.

உள்ளம்‌ ஒழுங்காயிருப்பவர்க்கு உலகெலாம்‌ ஒழுங்குடையதாய்த்‌ தென்படுகிறது. உள்ளம்‌ கேடடைந்தால்‌ உலகமெல்லாம்‌ கேடுடையதாய்க்‌ காட்சி கொடுக்கிறது. உள்ளத்தை ஒழுங்குபடுத்துதல்‌ ஒன்றே நம்‌ கடமை. உள்ளம்‌ தூயதாகுமளவு புறமும்‌ நமக்குத்‌ தூயதாகத்‌ திகழும்‌.


Beautiful smile of Lord Dakshinamurthy (திரு தக்ஷிணாமூர்த்தியின் அழகிய சிரிப்பு)


 

Friday, 2 July 2021

🌸திரு கேதார்நாத் திருக்கோயில் 🌸 -------------- 🌻Sri Kedarnath Temple🌻


 

7th Thirumurai -- Hymn No. 23 -- Song no. 2:

 ----------------

Engaenum irundhu un adiyaen unai ninaindhaal

Angae vandhu ennodum udanaagi nindraruli

Ingae envinaiyai aruthitu enaiyaalum

Gangaa naayaganae kazhipaalai maeyaanae.

-----------------

Explanation:

✨✨✨✨✨

Sundarar says that Lord Shiva who is very much happily seated in the Thirukazhipaalai temple, will come and stand with the devotee whoever truly thinks of him. Also, Lord Shiva would destroy the effects of good and bad deeds of his devotees and by this he blesses his devotees.



ஏழாம் திருமுறை -- பதிகம் 23 -- பாடல் 2:

 ⭐️⭐️⭐️⭐️⭐️

எங்கேனும்‌ இருந்து உன்‌ அடியேன்‌ உனை நினைந்தால்‌ 

அங்கே வந்து என்னொடும்‌ உடனாகி நின்றருளி 

இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும்‌ 

கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.

⭐️⭐️⭐️⭐️⭐️

விளக்கம்

------------

"திருக்கழிப்பாலையில்‌ விரும்பி எழுந்தருளி இருக்கின்றவனே, நீயே உன்‌ அடியவனாகிய யான்‌ இப்பூமியிலே எங்காயினும்‌ இருந்து உன்னை நினைத்தால்‌, அங்கே வந்து என்னோடு கூடி. நின்று, என்‌ வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகனே" என்று சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானின் புகழைப் பாடுகிறார்.