Search This Blog

Thursday, 28 October 2021

Thirupanandhaal:

🌸🌸🌸🌸🌸🌸

Thaadagai, belonging to Asura clan (not the Thaadagai from Ramayana) worshipped the Lord of Thirupanandhaal (Chensadaiyappar) daily with the flower garland. One day, while worshipping the Lord with the flower garland her top dress was about to be displaced. Either she had to keep the garland down or she had to adjust her cloth to avoid embarrassment. To show the greatness of her devotion, Lord Shiva bent the head of the Lingam down so that she could put garland around the Lingam easily. Since Lord Shiva made the world know about the greatness of Thaadagai's devotion, this temple in which Chensadaiyappar resides is called Thaadagai Eecharam.

After the head of the Lingam got bent, none could straighten it. But Kungliya kaliya Nayanar, one of the 63 nayanmars tied a rope to his neck and the other end to the head of the Lingam. Lord Shiva on seeing the pure devotion of Nayanar straightened the head of Lingam.



திருப்பனந்தாள்:

 திருப்பனந்தாள்‌ : 

🌻🌻🌻🌻🌻🌻🌻

அசுரகுல மகளான தாடகை என்பவள்‌(ராமாயணத்தில்‌ வரும்‌ தாடகை அல்ல) தினமும்‌ பூமாலை ஏந்தி திருப்பனந்தாள்‌ மூலவர்‌ செஞ்சடையப்பரை வணங்கி வருகிறாள்‌. ஒரு நாள்‌ அவள்‌ பூமாலையுடன்‌ இறைவனை வணங்க வரும்போது அவளுடைய மேலாடை நழுவுகிறது. ஆடையைச்‌ சரி செய்ய பூமாலையைக்‌ கீழே வைக்க வேண்டும்‌ இல்லாவிடில்‌ மேலாடை சரிந்து நழுவி அவள்‌ பலர்‌ முன்னிலையில்‌ மானம்‌ இழக்க நேரிடும்‌. இந்த நிலையில்‌ அவளின்‌ இறை வழிபாட்டை மெச்சி இறைவன்‌ அவள்‌ தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும்‌ வகையில்‌ தலை தாழ்த்திக்‌ கொடுக்கிறார்‌. இப்படி தாடகையின்‌ பக்தியை உலகறியச்‌ செய்த செஞ்சடையப்பர்‌ குடி கொண்டிருக்கும்‌ இத்தலம்‌ தாடகைஈச்சரம்‌ என்றே அழைக்கப்படுகிறது. 

தாடகைக்காக தலை தாழ்த்திய பிறகு அரசன்‌ முதலானோர்‌ எவ்வளவோ முயன்றும்‌ சிவபெருமானின்‌ தலை நிமிரவில்லை. 63 நாயன்மார்களில்‌ ஒருவரான குங்கிலியக்‌ கலயர்‌ வந்து இறைவன்‌ சடைமுடிக்கும்‌ தம்‌ கழுத்திற்கும்‌ கயிறு கட்டி இழுக்கிறார்‌. இறைவனும்‌ அவரின்‌ தூய்மையான பக்திக்குக்‌ கட்டுப்பட்டு தலை நிமிர்கிறார்‌.


Thursday, 21 October 2021

Arrogance

Oh God! I am always with you, but arrogance is hiding your holy light from me.

Earth is many times smaller than sun and the sun gives light to many planets including earth. But cloud could hide that light. In the same way, this little arrogance hides the holy light of God from us. The sun's heat would move the cloud away. In the same way, By God's grace, arrogance will be eliminated.



ஆணவம்

இறைவா, நான்‌ யாண்டும்‌ உன்னுடைய சன்னிதியிலேயே இருக்கிறேன்‌ எனினும்‌ ஆணவம்‌ குறுக்கிட்டு உன்‌ காட்சியை மறைக்கிறது, என்னே!!!

சூரியனைவிடப்‌ பன்மடங்கு சிறியது பூமி, சூரியன்‌ இப்பூமிக்கும்‌ இன்னும்‌ பல கிரகங்களுக்கும்‌ வெளிச்சம்‌ கொடுத்துக்‌ கொண்டிருக்‌கிறது. ஆனால்‌ மூடுபனி அவ்வெளிச்சத்தை வர வொட்டாது தடுத்து விடுகிறது. அற்ப ஆணவத்துக்கு இறைக்‌ காட்சியை மறைக்கும்‌ திறமை யிருக்கிறது. சூரிய வெப்பத்தால்‌ மூடுபனியை அகற்றுவது போன்று இறைவன்‌ அருளால்‌ ஆணவ மலத்தை அகற்ற வேண்டும்‌.



Saturday, 9 October 2021

Lord Shiva giving Taal (cymbals) to Sambandhar

 Thirukolakka:

🌟🌟🌟🌟🌟

Thirugnanasambandhar who was born in Sirkazhi, started his holy journey of visting Lord Shiva temples from this temple. He was at the age of 3 when he started his journey from this temple. With his sweet little hands, he clapped and sang Thevaram hymn for Lord Shiva in this temple. As Lord Shiva was worried that Sambandhar's hands would hurt, he gave Sambandhar a pair of Taal (clash cymbals) made of gold. Goddess Parvati gave divine music to that instrument. Hence Goddess is praised here as 'Osai kudutha Nayagi' which means Goddess who gave divine music. Sundarar has mentioned this event in his Thevaram hymn.



சம்பந்தருக்கு பொற்றாளம் வழங்கிய இறைவன்

திருக்கோலக்கா: 

✨✨✨✨✨✨✨

சீர்காழியில்‌ பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர்‌ திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார்‌ கோவில்‌ என்று வழங்கும்‌ இத்தலத்தில்‌ இருந்து தான்‌ தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத்‌ தொடங்கினார்‌. சீர்காழியில்‌ ஞானப்பாலுண்டு பதிகம்‌ பாடத்‌ தொடங்கிய சுமார்‌ மூன்று வயதுடைய சம்பந்தர்‌ தனது முதல்‌ தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத்‌ தான்‌. தனது சின்னஞ்சிறு கைகளால்‌ தட்டி தாளம்‌ போட்டுக்கொண்டு இத்தலத்தில்‌ இறைவனைத்‌ துதித்து பதிகம்‌ பாடினார்‌. கைகள்‌ வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன்‌ சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம்‌ கொடுத்து அருளினார்‌. இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத்‌ தந்தருளினாள்‌. ஆதலின்‌ இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர்‌. சம்பந்தருக்கு பொற்றாளம்‌ தந்த இறைவனை சுந்தரர்‌ தனது பதிகத்தில்‌ குறிப்பிட்டுப்‌ பாடியுள்ளார்‌.



Sunday, 3 October 2021

ஸ்வர்க மண்டபம் (Swarga Mandapa)

கித்ராபூர், மகாராஷ்டிராவில் உள்ள கோபேஷ்வர் திருக்கோயிலுள்ள ஸ்வர்க மண்டபம். இக்கோயில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவபெருமானின் திருக்கோயில் ஆகும்.

-------------------------

Swarga mandapa of Kopeshwar mandir in Khidrapur, Maharashtra. It was built in 12th century and this temple is dedicated to Lord Shiva.