Search This Blog

Friday, 22 January 2021

பிட்சாடனர்

 🌷பிட்சாடனர்🌷:

⭐⭐⭐⭐⭐

தாருகா வன முனிவர்கள் மற்றும் அவர்களுடைய மனைவியர்கள், கடவுள் கொள்கையில் நம்பிக்கையின்றி, இறைவனை மதியாது, வேள்வியே தெய்வமென மயங்கி நின்றனர். வேத நெறிகளையும் சில கடமைகளையும் மட்டுமே மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர். இறைவனை மதியாத தாருகா வனத்து முனிவர்களை நல்வழிப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட ஈசனார், திருமாலை மோகினி வேடத்தில் வரச்செய்து, தாம் பேரழகு பொலியும் இளைஞனாகக் கோலம் கொண்டு, தாருகாவனத்துள் அழகிய பிச்சாண்டவர் (பிட்சை எடுக்கும் கோலம்) கோலத்தில் சென்றார்.


பிச்சாண்டவரின் வடிவழகைக் கண்ட முனி பெண்டிர் காதல் வயப்பட்டு, தங்கள் கணவர்களை விட்டு விட்டு, பிச்சாண்டவர் பின்னே சென்றனர். மோகினியின் அழகில் முனிவரும் மயங்கிச் சொல்லழிந்து, ஆசைவயப்பட்டு குழம்பினர். அவர்களுக்குச் சுயநினைவு வந்தபோது, தாமும் தம் மனைவியரும் நிற்கும் கோலத்தை உணர்ந்து சீற்றமுற்று, சிவபெருமானை அழிக்க அபிசார வேள்வி இயற்றலாயினர். அதிலிருந்து தோன்றிய புலி🐯, யானை🐘, பாம்பு🐍, சூலம், மான், பூதப்படை, உடுக்கை முதலியவைகளை ஒவ்வொன்றாகச் கொல்லுமாறு ஏவினர். ஆனால் அப்படைகள் பிச்சாண்டவரைக் கொல்லும் ஆற்றல் இல்லாது போய் பிச்சாண்டவருக்கே ஆடையாய், அணியாய், கருவியாய் அடைக்கலம் புகுந்தன. இறுதியாக அவ்வேள்வியில் தோன்றிய முயலகனையும், வேள்வித் தீயையும் ஏவினார்கள். முயலகன் பிச்சாண்டவரின் திருவடியில் அமர்ந்தான். வேள்வித் தீ, ஒரு திருக்கையில் அமர்ந்தது. சிவபெருமான் யாகத்தீயைக் கையிலேந்தித் திருநடம் புரிய, வந்திருப்பது முழுமுதற்பரமே என்றுணர்ந்த முனிவர்கள் தம் தவறுணர்ந்து, நல்லறிவு பெற்று சிவபெருமானை வணங்கினர்😇.



Tuesday, 19 January 2021

THIRUVASAGAM - The Sacred Lily Flowers

 THIRUVASAGAM -- The Sacred Lily Flowers -- Song 1

***********

(The following verses are taken from G.U Pope's English translation of THIRUVASAGAM)

His sacred Feet,- the twain, - soon as upon my head He placed,

Help of encircling friends, - the whole,  - I utterly renounced;

In Tillai's court begirt with guarded streams, in mystic dance

He moves. That Raftsman glory SING AND PLUCK THE LILY-FLOWERS!

***********

EXPLANATION⭐:

Manickavasagar says, "As soon as the Lord placed his holy feet upon my head, I renounced all my friends and relatives". He praises Lord Shiva as one who dances in the court of Thillai and who is like a boat🛶  in helping us crossing the ocean🌊  of birth and death. So Manickavasagar instructs us to sing the glory of Lord Shiva and pluck the lily flowers🌷. 

🌟INFERENCE🌟

By obtaining the knowledge of God (knowledge of Brahman), the attachment to the worldly things will get cut off.



திருவாசகம் - திருப்பூவல்லி

திருவாசகம் -- திருப்பூவல்லி -- பாடல் 1:🌟

********

இணையார்‌ திருவடிஎன்‌ தலைமேல்‌ வைத்தலுமே 

துணையான சுற்றங்கள்‌ அத்தனையுந்‌ துறந்தொழிந்தேன்‌ 

அணையார்‌ புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற 

புணையாளன்‌ சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ

*********

🌟விளக்கம்🌟: 

இரண்டாகிய அரிய திருவடியை, என்‌ தலையின்‌ மீது வைத்தவுடன்‌, இதுவரையில்‌ துணையென்று நினைத்திருந்த உறவினரெல்லாரையும்‌, விட்டு நீங்கினேன்‌. அணை பொருந்திய நீர் சூழ்ந்த தில்லைநகர்க்‌ கண்ணதாகிய, அம்பலத்தில்‌ ஆடுகின்ற, நமதுபிறவிக்‌ கடலுக்கு ஓர்‌ மரக்கலம்‌🛶 போல்பவனாகிய சிவபெருமானது பெருமையைப்‌ புகழ்ந்து பாடி அல்லி மலர்களைப்‌🌷 பறிப்போம்‌.

கருத்து🌟:

இறைவனது திருவடி ஞானத்தால் உலகப்பற்று அறும் என்பது கூறப்பட்டது.



Thursday, 14 January 2021

Spirituality in worldly life

 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

Many people think that we can search for the God only after we finish our worldly duties. Renunciation does not mean 'To leave or add something'.

Spirituality is constantly thinking of God's holy feet amidst the experience of our worldly life👨‍👩‍👧‍👦 which is determined by our destiny.

The every next step in our life happens automatically when we think of God's holy name in our mind and dedicate our every work to God before we take any step. Worldly life and spirituality are not different from one another. The progress in spirituality lies in the worldly life. If we remain in the state in which we are now and consider our happiness😄 and sorrow😪 as the acts of God, then our karmas get exhausted very soon and we all can attain God's holy feet.😃👍🏽



லெளகீக ஆன்மிகம்

💐💐💐💐💐💐💐💐💐

குடும்பத்தில்👨‍👩‍👧  உள்ள கடமைகள் எல்லாவற்றையும் வாழ்க்கையில் முடித்துக்கொண்டு அதற்குப் பிறகுதான் கடவுளைத் தேட வேண்டும் என்று பல பேர் எண்ணுகிறார்கள். துறவு என்பது எதையும் சேர்த்துக் கொள்வதும் அல்ல. எதையும் விட்டு விடுவதும் அல்ல. விதிவசத்தால் நமக்கு வந்திருக்கக் கூடிய வாழ்க்கையை சகஜமாக அனுபவித்துக் கொண்டு எப்பொழுதும் இறைவனுடைய திருவடியில் எண்ணத்தை வைத்து செயல்படுவதுதான் ஆன்மீகம். 

******

மானசீகமான தெய்வத்தின் இறை நாமத்தை சொல்லிக்கொண்டே செய்யும் வேலைகள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து ஒரு அடி எடுத்து வைத்தால் அடுத்த அடி தானாக வரும். லௌகீகத்தில் இருந்து ஆன்மீகம் வேறுபட்டது அல்ல. லௌகீகத்திற்குள்ளேயே தான் ஆன்மீக விருத்தி இருக்கிறது. எப்படி இருக்கின்றோமோ அப்படியே இருந்து கொண்டு வரக்கூடிய சுக😄 துக்கங்களை😪 இறைவன் செயலாக ஏற்றுக் கொண்டால் சீக்கிரம் கர்மா என்ற கடன் கழிந்து இறைவனை அடைந்துவிடலாம்.😃👍🏽