Search This Blog

Friday, 25 June 2021

Awakening

 🌟🌟🌟🌟

Oh God! The infinite knowledge, Let me wake up from sleep to praise your glory.

To be in the state of ignorance is like being in sleep. 

To be under the influence of senses is similar to sleep. 

And in this way, our many previous births have been wasted.

To be in the state of self (Atman) is the true spiritual awakening.


விழிப்பு:

 ✨✨✨✨

பேரறிவே, உன்னைப்‌ போற்றுதற்கு நான்‌ உறக்கத்தினின்று விழித்து எழுந்திருப்பேனாக. 

அக்ஞானத்தில்‌ அழுந்திக்‌ கிடப்பது உறக்‌கத்துக்கு ஒப்பானது. இந்திரியங்களின்‌ வசப்‌பட்டுக்‌ கிடப்பது உறக்கத்துக்கு ஒப்பானது. அப்படி எண்ணிறந்த பிறவிகள்‌ போய்விட்டன. ஆத்ம போதத்தில்‌ விழித்து எழுந்திருப்பதே உண்மையான விழிப்பு.



Tuesday, 22 June 2021

Impermanence of worldly wealth

First Tantra -- Selvam nilayaamai (Impermanence of wealth) -- Song no. 169:

---------------

Iyakkuru thingal irutpizham bokkum

Thuyakkuru selvathai sollavum vaendaa

Mayakkara naadumin vaanavar khonai

Peyarkondal pOla perunselva maamae.

---------------

Explanation:

✨✨✨✨✨

The moon which brightly glows, becomes smaller and smaller and ultimately disappears during its phase. Similarly, the large amount of wealth slowly disappears day by day and ultimately disappears. Also the wealth of the worldly life cause a lot of troubles. So let us all leave aside the worldly wealth and yearn for the holy feet of Lord Shiva so that we could attain him. If we could receive his blessing, then Lord himself will pour down the wealth as a rainy cloud.




உலகச் செல்வங்களின் நிலையாமை

🌼முதல் தந்திரம்🌼 -- செல்வம் நிலையாமை -- பாடல் எண்: 169:

---------------

இயக்குறு திங்கள்‌ இருட்பிழம்‌ பொக்கும்‌ துயக்குறு செல்வத்தைச்‌ சொல்லவும்‌ வேண்டா 

மயக்கற நாடுமின்‌ வானவர்‌ கோனைப்‌ 

பெயற்கொண்டல்‌ போலப்‌ பெருஞ்செல்வ மாமே. 

---------------

விளக்கம்‌

✨✨✨✨✨

பெளர்ணமி அன்று முழுவதாக🌚 இருந்து பெரும்‌ ஒளி வீசும்‌ நிலவு கொஞ்சம்‌ கொஞ்சமாகத்‌ தேய்ந்து பிறகு அமாவாசை அன்று சுத்தமாக மறைந்து🌔 விடுவதுபோல அதிகமாக இருந்தாலும்‌ நாளடைவில்‌ குறைந்து பிறகு ஒன்றுமே இல்லாமல்‌ ஆகிவிடும்‌ உலகச்‌ செல்வங்களால்‌💵💸💰 வரும்‌ துன்பங்களைப்‌ பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமா? இந்த நிலையில்லாத உலகச்‌ செல்வங்களின்‌ மேல்‌ மயங்கி இருக்காமல்‌ என்றும்‌ நிலைத்திருப்பவனும்‌ தேவர்களுக்கெல்லாம்‌ தலைவனுமாகிய இறைவனைத்‌ தெளிவாக உணர்ந்து அடைவோம். அப்படி அடைந்தால்‌ பெரும்‌ மழையை🌧 கொடுக்கும்‌ கார்மேகம்‌ போல பெருஞ்‌ செல்வங்களை இறைவன்‌ மழை போல்‌ பொழிவார்.



Don't speak lies

In this Kaliyugam many believe that there is no harm in indulging in white lies now and then. How one should escape this habit, one may ask. It is better to tell this dear person, “We are the creators of our own words. They are not given by others. Hence we are responsible for the falsehood”. Must we resort to this and pay the price? 

If one state things as they are, one may have to face a lack of sympathy in the beginning. However it will earn the trust of those whom one meet. Think about this. Avoid bluffing from the start — however small the lies, when you tell one lie, you will find that you have to say several more to cover it up. Life itself becomes one long process of deception,so do set this right.



பொய் கூறாமல் இருப்பது

கலியுகத்தில்‌ சிறு சிறு பொய்கள்‌ கூற வேண்டிய ஓர்‌ நிலை உள்ளது இதிலிருந்து நாம்‌ எவ்விதம்‌ மீள்வது?

வார்த்தை என்பது நம்முடையதாகும்‌. இது மற்றவர்களுடையது அல்ல இவ்வார்த்தையை நாமே கூறி அதனை நாமே பொய்யாக்கி வாழ்வதன்‌ அவசியம்‌ என்ன? இருப்பதை இருக்கும்படி கூறினால்‌ துவக்கத்தில்‌ சிறிது கஷ்டமாக🥵 இருக்கும்‌ என்ற போதிலும்‌ அனைவர்களிடமும்‌ இது ஒரு பெரும்‌ விசுவாசத்தை (நம்பிக்கை) ஏற்படுத்தும்‌. இதனை சிந்தித்து🤔 ஆரம்ப காலத்தில்‌ பொய்மையை தவிர்த்தல்‌ வேண்டும்‌. பொய்யானது ஒன்று கூறிட அதனை மூடி மறைக்க பல பொய்களை கூற வேண்டிய நிலையும்‌ காண்பீர்கள்‌. இத்தகைய நிலையில்‌ வாழ்க்கை பொய்யாகி விடும்‌ என்பதை மனதில்‌ வைத்து திருத்தங்கள்‌ செய்ய வேண்டும்.




Saturday, 12 June 2021

Fifth Thevaram -- Hymn No. 1 -- Song 1:

 🌼🌼🌼🌼🌼

Annam baalikum thillai chitrambalam

Ponnam baalikum maelum ippoomisai

Ennam baaliku maarukandu inbura

Innam baalikumho ippiraviyae.

🌼🌼🌼🌼🌼

Explanation:

-------------

Thillai Natarajar who gives us salvation after we die, also gives us wealth for our worldly life. So Thirunavukkarasar asks Lord Shiva that would he get a human birth so as to see the merciful Lord again and again. This shows the immense devotion of Thirunavukkarasar towards Lord Shiva.



ஐந்தாம் தேவாரம் -- பதிகம் 1 -- பாடல் 1:

 🌼🌼🌼🌼🌼

அன்னம்‌ பாலிக்கும்‌ தில்லைச்‌ சிற்றம்பலம்‌ 

பொன்னம்‌ பாலிக்கும்‌ மேலும்‌ இப்பூமிசை 

என்னம்‌ பாலிக்கு மாறு கண்டு இன்புற 

இன்னம்‌ பாலிக்குமோ இப்பிறவியே.

🌼🌼🌼🌼🌼

விளக்கம்:

நாம்‌ இறந்த பின்னர்‌ பேரின்ப வீடு அளித்து நமக்கு அருளும்‌ தில்லைச்‌ சிற்றம்பலவன்‌, பொன்‌ அளித்து நம்மை இம்மையிலும்‌ காக்கின்றார். அத்தகைய சிவபிரானை, மறுபடியும்‌ மறுபடியும்‌ கண்டு களிக்க, எனக்கு மனிதப்‌ பிறவியினை மீண்டும்‌ மீண்டும்‌ அளிப்பாரோ? என்று திருநாவுக்கரசர் இறைவனிடம் வேண்டுகின்றார்.



Thillai Natarajar

Thirunavukkarasar (Appar) says:

⭐️⭐️⭐️⭐️⭐️

If one sees Lord Nataraja in Thillai, then he/she becomes very happy. For this happiness, one should be born as a human. If this experience of Lord Nataraja is a happier one, then the human birth which gives this type of experience should also be a happier one.


தில்லை நடராஜர்

 அப்பர்‌ பெருமான்‌ கூறுகிறார்‌:

⭐️⭐️⭐️⭐️⭐️

தில்லையில்‌ உள்ள ஸ்ரீமந்‌ ஆனந்த நடராஜமூர்த்தியை காண்பது எவ்வளவு இன்பம்‌ தரக்‌ கூடியது. அந்த இன்பத்திற்காகவே மீண்டும்‌ மீண்டும்‌ இந்த மனிதப்‌ பிறவி வேண்டும்‌ என்கிறார்‌. இறை அனுபவம்‌ இன்பமானது என்றால்‌, அந்த இன்பத்தைத்‌ தரும்‌ மனிதப்‌ பிறப்பும்‌ இனிமையாகத்‌ தானே இருக்க வேண்டும்‌😊✨.



Friday, 4 June 2021

One who does service will not suffer

 Third Thevaram -- Hymn No. 125 -- 3rd Song:

✨✨✨✨✨

Anburu sindhaiya raagi adiyavar

Nanburu Nalloor perumanam maevinindru

Inburum endhai inaiyadi aethuvaar

Thunburu vaarallar thondu seivaarae.

✨✨✨✨✨

Explanation:

⭐️⭐️⭐️⭐️⭐️

Let us see the song no. 3 of Thevaram hymn 'Kalloor perumanam' which was composed by Thirugnanasambandhar.

In Nallur Perumanam, Lord Shiva stands as Sivaloka Thyagarajar and whoever

1️⃣ Thinks of his holy feet in his mind


2️⃣ Praises Lord Shiva by words


3️⃣ Uses his/her body for the service of God 

Will never suffer in life. 


So whoever worships Lord Shiva by mind, words, body will never suffer in life. This clearly means that they will be happy.



தொண்டு செய்வார் துன்புறார்

மூன்றாம் தேவாரம் -- பதிகம் 125 -- பாடல் 3:

✨✨✨✨✨

அன்புறு சிந்தைய ராகி அடியவர்‌ 

நன்புறு நல்லூர்ப்‌ பெருமணம்‌ மேவிநின்று 

இன்புறும்‌ எந்தை இணையடி ஏத்துவார்‌ 

துன்புறு வார்‌அல்லர்‌ தொண்டு செய்வாரே. 

✨✨✨✨✨

விளக்கம்:

⭐️⭐️⭐️⭐️

திருஞானசம்பந்தர்‌ நிறைவாகப்‌ பாடிய கல்லூர்ப்‌ பெருமணம்‌ என்ற பதிகத்துள்‌ மூன்றாம்‌ பாடலில்‌ கருத்தை நோக்குக.


நன்மை எல்லாம்‌ பொருந்தியுள்ள நல்லூர்ப்‌ பெருமணத்தில்‌ பொருந்தி நின்று இன்புறும்‌ எந்தை ஆச்சாள்புரம்‌ சிவலோகத்‌ தியாகராசர்‌ அவரது இணை அடிகளை அன்புறு சிந்தையராய்‌ 


1) மனத்தால்‌ நினைப்போரும்‌ 


2) வாக்கினால்‌ ஏத்தித்‌ துதிப்போரும்‌ 


3)காயத்தால்‌ தொண்டு செய்வோரும்‌ 


மனம்‌ வாக்கு காயம்‌ ஆகிய முக்கரணங்களாலும்‌ பெருமானை வழிபடுவோரும்‌ துன்புறார்‌.எனவே இன்புறுவர்‌ என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.