Search This Blog

Tuesday, 28 September 2021

Thirunallurperumanam

Thirunallur perumanam:

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

Thirugnanasambandhar after marrying according to his parent's wishes, he worshipped Lord Shiva in Thirunallurperumanam temple along with his wife and his relatives. A holy light along with a path to enter, emerged before them in the temple. Thirugnanasambandhar advised everyone present there to merge with the holy light of Lord Shiva. But some of them hesitated on seeing the holy fire. So Thirugnanasambandhar sang 'Nama Sivaaya' hymn and praised the greatness of Lord Shiva's panchakshara. Then, Thirugnanasambandhar along with his wife and relatives merged with the holy light of Lord Shiva.

Since Thirugnanasambandhar, Thiruneelakanda yaazhpaanar, Muruga Nayanar, Thiruneelanakka Nayanar attained liberation at the same time in this same place, Thirunallurperumanam is of great significance. This great incident happened in Thirunallurperumanam Sivaloka Thiyaagaesar Temple.


திருநல்லூர் பெருமணம்:

 திருநல்லூர்பெருமணம்:

✨✨✨✨✨✨✨

திருஞானசம்பந்தர்‌ தன்‌ பெற்றோரின்‌ விருப்பப்படி திருமணம்‌ புரிந்து கொண்டு தம்‌ மனைவியுடன்‌ சுற்றம்‌ சூழ திருநல்லூர்பெருமணம்‌ ஆலயம்‌ வந்து இறைவனைத்‌ துதித்தார்‌. கோவிலில்‌ பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும்‌ வகுத்துக்‌ காட்டியது. சம்பந்தர்‌ தன்னுடன்‌ வந்த சுற்றத்தாரையும்‌ அடியார்களையும்‌ சிவசோதியில்‌ கலந்து முக்தி அடையும்‌ படி கூறினார்‌. சிலர்‌ நெருப்புச்‌ சோதியைக்‌🔥 கண்டு தயக்கமும்‌ அச்சமும்‌ கொள்ள, சம்பந்தர்‌ அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின்‌ மேன்மையைக்‌ கூறி நமச்சிவாய திருப்பதிகம்‌ பாடி தம்முடன்‌ வந்தோரை எல்லாம்‌ அச்சோதியில்‌ புகுமாறு சொல்லி, தாமும்‌ தன்‌ மனைவியுடன்‌ சோதியுட்‌ புகுந்து இறைவன்‌ திருவடியைச்‌ சேர்ந்தார்‌. 

சம்பந்தருடன்‌ சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர்‌, முருக நாயனார்‌, திருநீலக்க நாயனார்‌ ஆகிய நான்கு நாயன்மார்கள்‌ ஒரே நாளில்‌, ஒரே இடத்தில்‌ முக்தி அடைந்த தலம்‌ என்ற பெருமையும்‌ இத்தலத்திற்கு உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க சம்பவம்‌ நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம்‌ திருநல்லூர்‌ பெருமணம்‌ சிவலோகத்‌ தியாகேசர்‌ ஆலயம்‌.


🌸ஒரே படத்தில் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள்🌸 ----------------- 12 jyotirlingas in a single picture

 


Wednesday, 15 September 2021

The Donation of Love

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Oh Lord! By loving you, I completely surrender myself to you.

To ask for rewards from someone is not love. Love makes us to endlessly donate whatever we possess. True love makes us ready for acceptance of any suffering. Love makes us to donate generously. To take revenge on others is not the duty of love.


அன்பின் கொடை

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

தேவே, உன்னை நான்‌ நேசிப்பதால்‌ என்னை உனக்கே கொடுத்துவிடுகிறேன்‌. 

கைம்மாறு கேட்பது அன்பின்‌ வழியன்று. தன்னிடத்திருப்பதையெல்லாம்‌ ஓயாது எடுத்து வழங்குவது அன்பின்‌ இயல்பு. அல்லல்படுவதற்கு அன்பு என்றும்‌ ஆயத்தமாயிருக்கிறது. தன்னிடத்தில்‌ இருப்பதைக்‌ கொடுப்பதற்கு அன்பு ஆக்ஷேபம்‌ செய்வதில்லை. பழிக்குப்பழி வாங்குவது அன்பின்‌ செயல்‌ அன்று. அன்பு ஓயாது கொடுக்கிறது.


Everything happens by Grace of God

Thirumanthiram -- Paayiram -- History of Thirumoolar -- Song 92:

⭐️⭐️⭐️⭐️⭐️

Nandhi arulaalae moolanai naadipin

Nandhi arulaalae sadhaasivan aayinaen

Nandhi arulaal meignaanathul nanninaen

Nandhi arulaalae naanirun dhaenae.

⭐️⭐️⭐️⭐️⭐️

Explanation:

⚡️⚡️⚡️⚡️⚡️

Thirumoolar says that by God's grace, he sought the body of moolan. By God's grace, he became Sadasiva. By God's grace, he attained the divine truth. By God's grace, he remained as one with Lord Shiva. 

By this, Thirumoolar explains that everything happens only by God's grace.



எல்லாம் இறைவன் திருவருளாலே நடைப்பெறுகிறது

திருமந்திரம் -- பாயிரம் -- திருமூலர் வரலாறு -- பாடல் 92:

⭐️⭐️⭐️⭐️⭐️

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்‌ 

நந்தி அருளாலே சதாசிவன்‌ ஆயினேன்‌ 

நந்தி அருளால்மெய்ஞ்‌ ஞானத்துள்‌ நண்ணினேன்‌ 

நந்தி அருளாலே நானிருந்‌ தேனே. 

⭐️⭐️⭐️⭐️⭐️

விளக்கம்‌

⚡️⚡️⚡️⚡️⚡️

"குருநாதராகிய இறைவனின்‌ அருளினால்தான்‌ நான்‌ இடையன்‌ மூலனின்‌ உடலில்‌ புகுந்தேன்‌. அதன்பிறகும்‌ அவரின்‌ அருளினால்தான்‌ அந்த உடலிலேயே தவ நிலையில்‌ இருந்து சதாசிவமாகவே மாறினேன்‌. அவரின்‌ அருளினால்தான்‌ உண்மையான ஞானத்தை அடைந்து அதனுள்ளேயே உறைந்திருந்தேன்‌. அவரின்‌ அருளினால்தான்‌ அவரோடு எப்போதும்‌ இருந்தேன்‌." என்று இறைவனின் திருவருளாலே அனைத்தும் நடக்கின்றது என்பதை திருமூலர் நமக்கு உணர்த்துகின்றார்.



ஓம் சிவாயநம --- Om Sivaaya Namah


 

Wednesday, 1 September 2021

What is Ramana Maharishi asking from God?

Sri Arunachala Pathigam by Ramana Maharishi:

-----------------

Oh the One who has ruled over me by your kindness! 

If you haven't blessed me by presenting yourself before me, 

in the world lacking brightness, 

longing and being perturbed 

if I leave this body, what will be my fate? 

Without seeing the Sun, will the lotus bloom? 

Oh Sun of the Suns! You Grace springs forth like from an eternal geyser, 

Oh Love that is called Arunachala!

-------------------

Explanation:

Ramana Maharishi says the following Lord Arunachala " Oh Lord! One who has ruled me by your kindness, bless me by showing your true form else I shall leave this body. Like lotus which will not bloom without seeing the sun, I shall not stay in this body without seeing your true form".



இரமண மகரிஷி இறைவனிடம் வேண்டுவது என்ன?

இரமண மகரிஷி அருளிய 🌻அருணாசல பதிகம்🌻:

கருணையா லென்னை யாண்டநீ யெனக்குன்‌ காட்சிதந்‌ தருளிலை யென்றா 

லிருணலி யுலகி லேங்கியே பதைத்திவ்‌ வுடல்விடி லென்கதி யென்னா 

மருணனைக்‌ காணா தலருமோ கமல மருணனுக்‌ கருணனா மன்னி 

யருணனி சுரந்தங்‌ கருவியாய்ப்‌ பெருகு மருணமா மலையெனு மன்பே. 


பொருள்‌✨: 


"மாண்புமிக்க அருணாசலம்‌ என்னும்‌ அன்புருவே, உலகுக்கு🌏 ஒளியூட்டும்‌ சூரியனுக்கும்‌🌞 ஒளிதரக்கூடிய ஞானசூரியனாய்‌ விளங்குபவனே! ஊற்றெடுத்து🌊 வற்றாத அருவியாய்ப்‌ பெருகுகின்ற உனது அவ்வியாஜ கருணையினால்‌ என்னை நீ ஆட்கொண்டருளினாய்‌. இனி எனக்கு உனது சொரூப தரிசனத்தைக்‌ கொடுத்து அருளாவிடில்‌, அஞ்ஞான இருளில்‌🌑 துன்புற்று இந்த உலகத்தில்‌, உன்‌ அருள்‌ தரிசனத்திற்காக ஏங்கிப்‌ பதைப்புற்று சரீரத்தை விடும்படி நேரிடுமானால்‌ என்னுடைய கதி என்னவாகும்‌? சூரியனைக்‌🌝 காணாது தாமரை மலர்ந்திடுமா? எனக்கு அருள்புரிவாயாக!" என்று ரமண மகரிஷி அண்ணாமலையாரிடம் வேண்டுகிறார்