Search This Blog

Friday, 6 November 2020

மனிதனின் ஆணவம்

பரமேஸ்வரர் பூமியை🌍 வலம்‌ வந்து கொண்டிருந்தார்‌. அவரைச்‌ சுமந்து கொண்டு நந்தி மூன்று உலகங்களுக்கும்‌ சென்றார்‌. அப்படிச்செல்கையில்‌ அவருக்கு ஓர்‌ எண்ணம்‌ தோன்றியது: “மூன்று உலகங்‌களையும்‌🌍 தாங்குகிற இறைவனை நான்‌ சுமக்கிறேன் " என்ற ஆணவம்‌ தலையெடுத்தது🤕. இது தொண்டனுக்கு ஒவ்வாது. பக்தனுக்குப்‌ பாடம்‌ புகட்டக்‌ கடவுள் எண்ணினார்‌. தம்‌ ஜடாபாரத்திலிருந்து ஒரு முடியைப்‌ பிடுங்கித்‌ தான்‌ அமர்ந்திருந்த விடையின்மீது வைக்க, அந்த ஒரு ஜடாமுடியின்‌ பாரத்தைத்‌😰 தாங்க முடியாமல்‌ திணறிய நந்தி ஓர்‌ அடிகூட எடுத்துவைக்க முடியாமல்‌ நான்கு கால்களையும்‌ பரப்பிக்கொண்டு நாக்குத்தள்‌ளியபடி🥵 அந்த இடத்திலேயே கிடந்தார்‌. 

----------------

மொத்த ஜடாமுடியையும்‌ சுமக்கும்‌ போது பாரம்‌ இல்லை. ஆணவம்‌ தலையெடுத்தபோது (அதாவது இறைவனை விட்டுப்பிரிந்தபோது) அதில்‌ ஒரு முடியைக்‌ கூடச்‌ சுமப்பதற்குக்‌ கஷ்டமாகிவிட்டது. 

-----------------

நாம் உணர வேண்டிய கருத்து🙂:

************

“அவனன்றி ஓர்‌ அணுவும்‌ அசையாது ” என்பது ஆப்தமொழி. தன்மூலம்‌ நிகழ்வது தன்னுடைய செயல்‌ என்று நினைப்பது மனிதனுடைய ஆணவம்‌🤕. இந்த எண்ணமே மனிதன்‌ படும்‌ துன்பங்களுக்‌கெல்லாம்‌ காரணம்‌. பக்தனின்‌ ஆணவத்தை நீக்கி தன்மயமாக்கிக்‌ கொள்வது சிவபெருமானின்‌ தனிச்செயல்‌😇.

************



Wednesday, 4 November 2020

Lord Shiva's 5 kinds of Tandav

THIRUMANTHIRAM -- Fourth Tantra -- Asabai -- 4th Song:

--------------

Aamae ponnambalam arpudham aanandham

Aamae thirukooth thanavara thaandavam

Aamae piralaya maagumath thaandavam 

Aamae sangaara tharunthaan davangalae

---------------

EXPLANATION:

**************

Thillai temple, which is located in Chidambaram shows 5 kinds of Sacred dance (Tandav) of Lord Shiva who is universal to all beings.

----------

They are:

----------

1️⃣ Arpudha (Wonder) Tandav - which creates all the beings of universe 

⭐⭐⭐⭐⭐

2️⃣ Aanandha (Bliss) Tandav - which gives immense pleasure to those who attain knowledge of God 

⭐⭐⭐⭐⭐

3️⃣ Anavara (Eternal) Tandav - which sustains the life of every being in the universe 

⭐⭐⭐⭐⭐

4️⃣ Sangaara (Dissolution) Tandav - which bestows grace by destroying the worldly life of a being when its karma get exhausted 

⭐⭐⭐⭐⭐

5️⃣ Pralaya (Deluge) Tandav - which completely destroys the world along with the beings in it

⭐⭐⭐⭐⭐

These are the five kinds of Sacred dance as mentioned by Thirumoolar in the above Thirumanthiram.



ஐந்து வகை தாண்டவம்

திருமந்திரம் -- நான்காம்‌ தந்திரம்‌  அசபை -- பாடல் 4:

--------------

ஆமே பொன்னம்பலம்‌ அற்புதம்‌ ஆனந்தம்‌ 

ஆமே திருக்கூத்‌ தனவரத்‌ தாண்டவம்‌ 

ஆமே பிரளய மாகும்‌அத்‌ தாண்டவம்‌ 

ஆமே சங்காரத்‌ தருந்தாண்‌ டவங்களே. 

--------------

விளக்கம்‌:

***********

உலகத்திலுள்ள அனைவருக்கும்‌ பொதுவான இறை சக்தி வீற்றிருக்கும்‌ தென்‌ நாட்டு சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலம்‌ இறைவனின்‌ ஐந்து5️⃣ வகையான திருக்கூத்துக்களை (நடனம்‌) காட்டி நிற்கின்றது. 

---------

அவை 

---------

1️⃣ அண்ட சராசரங்களில்‌ இருக்கும்‌ அனைத்து உயிர்களையும்‌ படைக்கின்ற - அற்புத தாண்டவம்‌ 

⭐⭐⭐⭐⭐

2️⃣ அந்த உயிர்களில்‌ உண்மை ஞானம்‌ பெற்றவருக்கு பேரின்பத்தைக்‌ கொடுக்கும்‌ -  ஆனந்த தாண்டவம்‌

⭐⭐⭐⭐⭐

3️⃣ அனைத்து உயிர்களின்‌ வாழ்க்கை முழுதும்‌ அவற்றைத்‌ தாங்கிக்‌ கொண்டு மூச்சாய்‌ உயிராய்‌ இயங்குகின்ற -  அனவரத்‌ தாண்டவம்‌

⭐⭐⭐⭐⭐

4️⃣ அவற்றின்‌ விதி முடியும்‌ போது உலக வாழ்க்கையை அழித்து அருளுகின்ற - சங்காரத்‌ தாண்டவம்‌ 

⭐⭐⭐⭐⭐

5️⃣ உலகங்களையும்‌ அதிலிருக்கும்‌ உயிர்களையும்‌ முற்றாக அழித்துத்‌ தம்மோடு மீண்டும்‌ சேர்த்துக்கொள்ளும்‌ ஊழிக்காலப்‌ - பிரளயத்‌ தாண்டவம்‌

⭐⭐⭐⭐⭐

ஆகிய பெருமை வாய்ந்த ஐந்து தாண்டவங்களே ஆகும்‌.



Tuesday, 3 November 2020

God is within us

To some of those who think that their spiritual growth is confused:

*******

1️⃣First we must realize that God is not outside us. He is not external. 

2️⃣Next, we must feel His presence inside us. 

3️⃣Thirdly, we must realize that He never leaves us. 

4️⃣Fourth, we must realize He is beyond all needs. 

------------

We pray to God with love. This love grows into worshipful devotion. This in turn grows into a flood that engulfs us. We would say that we can now see God. Basically the rule is to stop looking for him outside us. We are never separate from Him. He never leaves us. 

           At the same time we have not realized that He is inside us. We give Him forms since we are unable to conceive Him as formless and thus create a distance between Him and us. We start feeling😑 wrongly that we exist separately. The truth is we suffer all the more because we increase the distance between Him and us. If we want to avoid this, we must include the phrase “Enrum Yenakkul Irukkum Iraiva” or “God who is always within me”. 

------------

It is the belief that this will become the truth which we in turn will realize. We must never say “We could not see God, our whole day of meditation was wasted!" ‘We meditated on a God who was outside us and not One who was inside us'. We must keep our heart♥️ pure, go inward, think 'God is where our heart is'. If we do this, without fail we shall enjoy God’ grace.



இறைவன் நமக்குள்ளே இருக்கின்றார்

ஆன்மீக நிலையை வைத்து இன்றைய மக்களிடம் குழப்பங்கள்‌ அதிகமாக உள்ளது ஏன்‌? 

------------------

1️⃣முதலில்‌ இறைவன்‌ வெளியே இல்லாதவன்‌ என்று உணர வேண்டும்‌. 

2️⃣இரண்டாவதாக அவர் நமக்குள்‌ இருக்கின்றான்‌ என்பதை உணர வேண்டும்‌. 

3️⃣மூன்றாவதாக அவர் நம்மை விட்டு பிரியாமல்‌ இருக்கின்றான்‌ என்பதை உணர வேண்டும்‌. 

4️⃣நான்காவதாக அவர் தேவையற்றவன்‌ என்பதை உணர வேண்டும்‌. 

------------------

அன்புடன்‌ அவரை பார்த்தால்‌😍 அன்பு அது பக்தியாய்‌ மாறி,  பக்தியது பெரும்‌ வெள்ளமாய்‌🌊 பெருகி அந்த பரவசத்தில்‌ நாமும்‌ அமர இறைவனை உறுதியாக காண முடியும்‌. அடிப்படையில்‌ இறைவனை வெளியில்‌ பார்ப்பதை விட வேண்டும்‌ என்பது விதியாகும்‌. ஏனெனில்‌ இறைவன்‌ நம்மை விட்டு பிரிந்ததில்லை, இறைவன்‌ நம்முடன்‌ இருக்கின்றான்‌ என்பதை நாம்‌ உணர்வதில்லை. இதனை அவ்வப்பொழுது சிந்தனையில்‌ வைக்க வேண்டும்‌. 

            ரூபம்‌ இல்லாத இறைவன்‌ நம்முடைய இயலாமையால்‌ ரூபத்தை கொடுக்கின்றான்‌. ரூபமாய்‌ இருக்கும்‌ இறைவனை சிறிது தூரத்தில்‌ பார்த்து நாம்‌ வேறு இறைவன்‌ வேறு என தவறாகப்‌ புரிந்து நமக்கும்‌ இறைவனுக்கும்‌ உள்ள தூரத்தை அதிகரித்ததால்‌ இக்காலத்தில்‌ வேதனை😑 காண்கின்றோம்‌ என்பதே உண்மையான நிலை. இதை தவிர்க்க வேண்டும்‌ என்றால்‌ 'எமக்குள்‌ இருக்கும்‌ இறைவா' என்கின்ற வாக்கியத்தை எப்பொழுதும்‌ நம் வழிபாட்டில்‌ சேர்த்துக்‌ கொண்டால்‌ இது நாளடைவில்‌ பெருகி உண்மையாக மாறி அந்த உண்மையை உணரச்செய்யும்‌. 

            இன்று முழுமையாக தவம்‌ செய்தோம்‌ இறைவனை காணவில்லை என எண்ண வேண்டாம்‌. ஏனெனில்‌ நாம் தியானம்‌ செய்தது வெளியில்‌ இருக்கும்‌ இறைவனை,  உள்ளிருக்கும்‌ இறைவனை அல்ல. உள்‌ சென்று ஹிருதய ஸ்தானத்தில்‌ இறைவன்‌ இருப்பதாக எண்ணி அந்த இடத்தை சுத்தமாக வைக்க வேண்டும். இறைனுக்கு பாத நமஸ்காரங்கள்‌ செய்வது ஒன்றே போதுமானது.

இவ்வாறு செய்து வந்தால் இறையருளைப் பெறலாம்😇.



Sunday, 1 November 2020

The Song of Thaayumaanavar

Kallaal erindhum kaivillaal adithum kanimadhura

Sollaal thudhithumnar pachilai thooviyum thondarinam

Ellaam pizhaithanar anbatra naan ini aedhuseivaen

Kollaa viradhiyar naernindra mukkatgurumaniyae!


- Thaayumaanavar💐

-----------------------------

EXPLANATION:

----------------

⭐Saakiya Nayanar worshipped Lord Shiva by throwing stone at Lingam daily.  At first, Nayanar followed Buddhism but later converted to Shaivism. In order to convince the Buddhists, he would throw a stone daily at the lingam.  It looks like Nayanar commits an act of violence but he had pure devotion towards Lord Shiva in his heart♥️.

------------

⭐Arjuna of Mahabharata did penance, fought with Lord Shiva with his bow and arrow🏹 and got Pasupathastra from Lord Shiva 

------------

⭐Thirunavukkarasar, Thirugnanasambandhar,  Sundarar, Manickavasagar sang🎶 devotional hymns in praise of Lord Shiva.  

------------

⭐Kannappa Nayanar worshipped Lord Shiva by offering him a leaf🌿 with pure devotion. 

------------

By these acts, they all obtained the grace of Lord Shiva.  Here Thaayumaanavar expresses his sorrow😔 as he is not having the same kind of devotion as the above mentioned great peoples in this song.

----------------------------

தாயுமானவர் பாடல்

கல்லால்‌ எறிந்தும்‌ கைவில்லால்‌ அடித்தும்‌ கனிமதுரச்‌ 

சொல்லால்‌ துதித்தும்நற்‌ பச்சிலை தூவியும்‌ தொண்டரினம்‌ 

எல்லாம்‌ பிழைத்தனர்‌ அன்பற்ற நான்‌ இனி ஏதுசெய்வேன்‌!

கொல்லா விரதியர்‌ நேர்நின்ற முக்கட்குருமணியே! 


- தாயுமானவர்‌ 

---------------------------

விளக்கம்:

---------------------------

⭐கல்லால்‌ அடித்து சிவபெருமானின் அருள்‌ பெற்றவர்‌ -சாக்கிய நாயனார்‌. இவர்‌ முதலில்‌ புத்தமதத்தைத்‌ தழுவி பின்னர்‌ சைவ மதம்‌ திரும்பியதும்‌, புத்த மதத்தினரைத்‌ திருப்தி செய்வதற்காக சிவலிங்கம்‌ மீது கல்லெறிந்தார்‌. வெளியில்‌ இப்படி வன்முறை காட்டினாலும்‌ மனத்தகத்தே சிவபெருமான்‌ மீது அன்புகொண்டார்‌♥️. 

💐💐💐💐

⭐வில்லால்‌🏹 அடித்து பாசுபதாஸ்த்தரம்‌ பெற்றவன்‌ அர்ஜுனன்‌. 

💐💐💐💐

⭐கனிமதுரச்‌ சொல்லால்‌ துதித்தவர்கள்‌🎶 தேவார, திருவாசக நால்வர்‌ ஆவர்‌.

💐💐💐💐

⭐பச்சிலை🌿 தூவி வழிபட்டவர்‌ கண்ணப்பநாயனார்‌. 

💐💐💐💐

இவர்களுக்கு இணையான அன்பு எனக்கில்லையே என்று வருத்தப்‌படுகிறார்‌😔 தாயுமானவர்‌.