Search This Blog

Monday, 31 August 2020

How to praise Lord Shiva's grace

 Manickavasagar tells us how to praise the greatness of Lord Shiva's grace:

************************

THIRUVASAGAM -- Kulaa pathu -- 9th song

______________________

Paazhsei vilaavi payaniliyaay kidapaerku

  Keezhsei dhavathaar kizhiyeedu naerpattu

Thaatseiya thaamarai saivanukken punthalaiyaal

  Aatsei kulaathillai aandaanai kondandrae

_______________________

EXPLANATION:

🌻🌻🌻🌻🌻🌻

Here the Lord Shiva's grace is compared to a treasure 💰💰 obtained in a barren land 

----------------

One gets ultimate happiness when one obtains TREASURE while ploughing a barren land.  In the same way,  Manickavasagar says that he got the same happiness when he received Lord Shiva's grace amidst the sorrows of life.

----------------

In the above song, it is said that Lord Shiva's grace should be praised as that of a treasure 💰💰



சிவபெருமானின் திருவருளை எவ்வாறு போற்றுதல் வேண்டும்

மாணிக்கவாசகர், திருவருளை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதை இப்பாடலில் விளக்கியுள்ளார்

***************************

திருவாசகம் -- குலாப் பத்து -- பாடல் 9

-----------------------------------------

பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக்

  கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத்

தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால்

  ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே

-----------------------------------------

விளக்கம்:

🌼🌼🌼🌼🌼

பாழ் நிலத்தை உழுபவனுக்கு புதையல்💰💰 அகப்பட்டது போல, மலர்ச்சியற்ற🥀 வாழ்விலே சுழல்கின்ற எனக்கு உன் அருளாகிய புதையல்😇 கிடைத்தது என்பதாம்.  

----------------

பாழ் நிலத்தை உழுது வருந்தியிருந்தவனுக்கு😔 ஒரு புதையல்💰💰 கிடைத்தால் எவ்வாறு போற்றுவானோ🤩 அதுபோல் வாடி வருந்தியிருந்த😔 எனுக்குக் கிடைத்த உனது திருவருளை நான் போற்றி வாழ்கின்றேன்😇 என்று மாணிக்கவாசகர் கூறுகிறார்

-----------------

இறைவன் திருவருளைப் பொன் போலப் போற்றி வாழ வேண்டும் என்பது இப்பாடலில் கூறப்பட்டுள்ளது



Saturday, 29 August 2020

Thevaram hymn for curing bone related problems and to wipe off our past karmas

 This Thevaram hymn was sung by 🌼THIRUGNANASAMBANDAR🌼.  By Lord Shiva's grace, if one sings this hymn daily in the early morning with pure devotion then the problems related to bone gets cured and our past karmas get wiped away

Hymn: Vinguvilai pathigam

எலும்பு முறிவு குணமாகவும், முற்பிறப்பு வினைகள் நீங்குதற்கும் வாசிக்க வேண்டிய பதிகம்

 💐திருஞானசம்பந்தர்💐 அருளிச் செய்த இப்பதிகத்தை சிவபெருமான் திருவருளால் தினமும் அதிகாலையில் இறை உணர்வோடு வாசித்தால் எலும்பு முறிவு குணமாகும், முற்பிறப்பு வினைகள் ஒழியும்

பதிகம்: விங்குவிளை பதிகம்

Friday, 28 August 2020

LORD SHIVA -- THE DESTROYER

 Is LORD SHIVA the destroyer???🤔

------------------------------------

      😳            YES           😳

------------------------------------

But he won't destroy us😉

---------------------------

THEN??

--------

He destroys our ignorance.

By destroying the ignorance, the knowledge of God is revealed 

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

He removes our three impurities (PRIDE, MAYA, KARMA) 

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

He helps us to get relieved from the cycle of birth and death 

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

So Lord Shiva destroys those things which are to be destroyed and removes those things which are to be removed.  By doing so, he is always with us ♥️



சிவபெருமான் அழிக்கும் கடவுளா?

 சிவபெருமான் அழிக்கும் கடவுளா???🤔

--------------------------------

        😳        ஆம்        😳

--------------------------------

அவர் அழிப்பது நம்மை அல்ல😉

--------------------------------

பிறகு???

----------

அவர் அழிப்பது நமது அறியாமையே.

நமது அறியாமையைப் போக்கி மெய் ஞானமாகி மிளிர்கின்றவர்

(மெய் ஞானத்தை அளிப்பவர்)

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

அவர் நம் மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) அகற்றுபவர்

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

நமது பிறவி என்னும் கட்டை அறுத்து நமக்கு பேரின்பத்தை வழங்குபவர்

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

சிவபெருமான் எதை நம்மிடம் இருந்து அகற்ற வேண்டுமோ அதை அகற்றி, எதை அழிக்க வேண்டுமோ அதை அழித்து, நம் அனைவருக்கும் துணையாக இருக்கின்றார்♥️



Wednesday, 26 August 2020

Some of the Dharmas which we can easily do

THIRUMOOLAR explains some of the dharmas which we can easily carry out in the following THIRUMANTHIRAM:

🌸🌸🌸🌸🌸🌸

The verses are: 

Yaavarku maamirai varkoru pachchilai

Yaavarku maampasu vukkoru vaayurai

Yaavarku maamunnum podhuru kaipidi

Yaavarku maampirarku innurai dhaanae

----------------

EXPLANATION:

----------------

Some of the dharmas which we can easily do:

🌼🌼🌼🌼🌼🌼

   ⭐We must worship God daily and offer him atleast a leaf🍀 with pure devotion 

🌟🌟🌟🌟🌟🌟

   ⭐We must give a small bundle of grass to cow🐄 to satisfy its hunger

🌟🌟🌟🌟🌟🌟

   ⭐We must donate a handful of food 🥖🍞🍚 to others before having our food

🌟🌟🌟🌟🌟🌟

   ⭐We must be kind to everyone♥️ whom we meet daily 

🌟🌟🌟🌟🌟🌟



நம்மால் செய்ய இயலும் சில தருமங்கள்

 நம்மால் செய்ய இயலும் தர்மம் சிலவற்றை திருமூலர் இத்திருமந்திர பாடலில் எடுத்துரைக்கின்றார்

💐💐💐💐💐💐

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சில்லை

யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை

யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே

💐💐💐💐💐💐

விளக்கம்:

நம்மால் எளிதில் செய்யக் கூடிய தருமங்கள்:

🌻🌻🌻🌻🌻🌻

  ⭐தினந்தோறும் இறைவனை வழிபட்டு அவருக்கு படைக்க அன்போடு எந்த ஒரு பச்சை🍀 இலையையோ வைத்தல்

🌻🌻🌻🌻🌻🌻

  ⭐தினந்தோறும் பசுவின்🐄 பசிபோக்க ஒரு கட்டு புல்லை கொடுத்தல்

🌻🌻🌻🌻🌻🌻

  ⭐தினந்தோறும் தினமும் சாப்பிடும் போது ஒரு கைப்பிடி🍚 உணவு தானம் செய்துவிட்டு சாப்பிடுதல்

🌻🌻🌻🌻🌻🌻

  ⭐தினந்தோறும் தாம் சந்திப்பவர்களிடம் அன்புடன்♥️ இனிமையாக பேசுதல்



Monday, 24 August 2020

Thevaram hymn for solving obstacles in our work, unnecessary blame and humiliation

This Thevaram hymn was sung by THIRUGNANASAMBANDAR.  By Lord Shiva's grace if one sings this hymn daily in the early morning with pure devotion then problems like obstacles which we face in our work, getting unnecessarily blamed, humiliated will get solved.💐💐

HymnMaraiyudaiyaai pathigam

காரிய தடை, வீண் பழி, அவமானங்கள் போன்றவை நீங்குவதற்கு வாசிக்க வேண்டிய பதிகம்

திருஞானசம்பந்தர் அருளிச் செய்த இப்பதிகத்தை சிவபெருமான் திருவருளால் தினமும் அதிகாலையில் இறை உணர்வோடு வாசித்தால் காரிய தடை, வீண் பழி, அவமானங்கள் போன்றவை நீங்கும்.💐💐

பதிகம்: மறையுடையாய் பதிகம்

Saturday, 22 August 2020

Which is true hunger?

 💐THIRUMANTHIRAM💐 -- Mudhal Thanthiram -- Nalkuravu (Poverty)

🌟🌟🌟🌟🌟🌟

Poikuzhi thoorpaan pulari pularuthen

Rakkuzhi thoorkum arumpandan thaeduveer

Ekkuzhi thoorthum iraivanai aethumin 

Akkuzhi thoorum azhukku atra bhodhae.

🌟🌟🌟🌟🌟🌟

EXPLANATION:

🌻🌻🌻🌻🌻🌻

The body's stomach is like a false pit, in the sense that even if the stomach is filled with food🍚🍢 during hunger, after 🕓four hours it once again makes us feel hungry🤤.  We always 🏃‍♂️🏃🏼‍♀️run in search of the food🍚🍢 to satisfy the false (temporary) hunger.  Even if we run in search of food, whatever job we do, in whatever path we earn money💰💴, we must always allot time for PRAISING THE NAME AND GLORY OF THE GOD.  If we do that, Our three impurities (PRIDE, KARMA, MAYA) will get cleared and our hearts become pure.  Those who have pure hearts, will have their real hunger getting satisfied ( They won't get caught in the Cycle of births and deaths and get liberated i.e they would attain moksha) by God's grace.


உண்மை பசி எது?

 💐திருமந்திரம்💐 -- முதல் தந்திரம் -- நல்குரவு (வறுமை)

🌟🌟🌟🌟🌟

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்

றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்

எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்

அக்குழி தூரும் அழுக்குஅற்ற போதே

🌟🌟🌟🌟🌟

விளக்கம்:🌻

உயிர்களின் வயிறு என்பது ஒரு பொய்யான குழியைப் போன்றது.  பசி வரும்போது உணவு🍚 சாப்பிட்டு பசி தீர்ந்தது😋 போலத் தெரிந்தாலும் மீண்டும் நான்கு🕓 மணி நேரத்தில் பசிக்க ஆரம்பித்து விடுகின்றது🤤.  இப்படி பொய்யாக இருக்கும் வயிறு என்னும் குழியை நிரப்புவதற்கு உணவு🍚 கிடைக்குமா என்று உயிர்கள் தினமும் தேடி அலைகின்றன🏃‍♂️🏃🏼‍♀️.  அவ்வாறு உணவைத்🍚 தேடி பசியைப் போக்கிக் கொண்டாலும், எந்த வேலை செய்தாலும், எப்படி பொருள்💰💴 சம்பாதித்தாலும் அதிலேயே மூழ்கி இருந்துவிடாமல் இறைவனைப் போற்றுதற்கும்🙏🏾, புகழுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.  அவ்வாறு செய்தால் உயிர்களின் மும்மலங்கள் (ஆணவம், கன்மம், மாயை) நீங்கி உள்ளம் தெளிவு பெறும்.  உள்ளம் தெளிவு பெற்ற உயிர்களின் பிறவிப்பசி அப்போதே தீர்ந்து இனி பிறவி இல்லாத மோட்ச நிலை கிட்டிவிடும்.


Friday, 21 August 2020

Truth of Life

 BODY AS A BULLOCK CART:🌻

💫💫💫💫💫💫💫💫💫💫💫

Only the bulls🐂 in the Bullock cart have life and some knowledge whereas the cart does not have life or knowledge.  The rider of the Bullock cart will lock the bulls which have life, to a lifeless cart and makes it to travel to his destination.  The food☘ and water required for the bulls will be provided by the driver or rider.  He also provides rest😴 to the bulls.  Sometimes the path would be smooth⬆️.  The bulls can go on smoothly😇.  Sometimes the path would be difficult🔃.  So the rider keeps only the amount of load that could be carried by the bulls and goes in those difficult paths.  Sometimes he may go via another path. The distance and the time🕤 for the travel will be determined only by the rider.  The bulls which have knowledge and life can't do anything but can only obey the rules of the rider.

--------------------

💫IN THE SAME WAY 💫

--------------------

The human body does not have any life or knowledge.  The soul, like a bull has knowledge and the God locks the soul in the human body like the rider who locks the bull with the cart. God rides the soul to his home🏘 (Towards Liberation).  The human too acts accordingly.  He also gives food🥖🍞 and water to the human which is required for him.  According to his Karma, he also gives joy😁 and sorrow😭 to him.  How many births, how many years are all decided by God alone.  

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

If one knows the above truth, there is NO TROUBLE, SORROW or MISERIES.

If one doesn't know the above truth, there is NO PEACE.


வாழ்க்கையின் உண்மை

 🌟உடல் என்னும் வண்டி🌟

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

சந்தையில் இருக்கும் மாட்டு🐂 வண்டிக்கு உயிரும் இல்லை அறிவும் இல்லை. மாட்டுக்கு உயிர் உண்டு அறிவும் உண்டு. வண்டிக்காரன் உயிருடன் இருக்கும் அறிவுள்ள மாட்டை உயிரில்லாத வண்டியுடன் பூட்டி தான் செல்ல வேண்டிய இடத்தை தீர்மானித்து வண்டியை செலுத்துவான். மாட்டிற்கு தேவையான உணவையும்☘ தண்ணீரையும் வழியில் கொடுப்பான். ஒய்வு நேரத்தில் அதற்கு ஓய்வு கொடுப்பான்😴. சில நேரங்களில் பாதை நன்றாக⬆️ இருக்கும். மாடு சுலபமாக😇 செல்லும். சில நேரங்கிளில் கரடு முரடான🔃 பாதை வரும். அப்போது மாட்டினால் தூக்க முடிந்த அளவு மட்டுமே பாரத்தை வைத்து கரடு முரடான பாதையில் கொண்டு செல்வான். பாதை சரியில்லை என்றால் வேறு பாதையில் செல்வான். எவ்வளவு தூரம் எவ்வளவு நேரம் எவ்வளவு பாரம் அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே. அறிவிருந்தும் அனைத்தையும் சுமந்து நடப்பது தானாக இருந்தாலும் மாட்டினால் ஒன்றும் செய்ய இயலாது. 

------------

அதுபோல

------------

உடம்பு என்ற ஜட வண்டியை ஆத்மா என்ற மாட்டுடன் பூட்டி இறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டி தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். மனிதன் இயங்கி ஒடிக்கொண்டே இருக்கின்றான். மனிதனுக்கு தேவையான உணவு🍞🥖 தண்ணீர் அளித்துவிடுகின்றான். அவன் கர்ம விதிப்படி தாங்கும் அளவிற்கு சந்தோசம் துக்கம் கொடுக்கின்றான். எத்தனை பிறவி எத்தனை காலம் அனைத்தையும் தீர்மானித்து இயக்குபவன் இறைவன் ஒருவனே. இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை. இதை உணராதவனுக்கு அமைதி இல்லை.😇


Tuesday, 18 August 2020

THIRUGNANASAMBANDAR explains Greatness of Vibhuti (THIRUNEERU in Tamil)

 GREATNESS OF VIBHUTI (THIRUNEERU in Tamil)🌟🌟

----------------

Second Thirumurai💐 -- 66 hymn -- 1st song:

----------------

Mandhira maavadhu neeru vaanavar maeladhu neeru

Sundara maavadhu neeru thudhikka paduvadhu neeru

Thandhira maavadhu neeru samayathi lulladhu neeru

Sendhuvar vaayumai pangan Thiruvaala vaayaan thiruneerae

-------------------

EXPLANATION: 💐

-------------------

THIRUGNANASAMBANDAR praises Lord Shiva along with Parvati Devi who is in the shrine of the temple of THIRUAALAVAAI town and praises the

VIBHUTI or THIRUNEERU of Lord Shiva in Thiruaalavaai as:

💫💫💫💫💫💫

🍀Like Mantra, it always protects those who smear it

💫💫💫💫💫💫

🍀It is smeared by those who reside in Sivaloka 

💫💫💫💫💫💫

🍀It gives beauty to the body

💫💫💫💫💫💫

🍀It has been praised in Vedas and Agamas

💫💫💫💫💫💫

🍀Present from ages to ages in Shaivism 

💐💐💐💐💐💐💐


திருஞானசம்பந்தர் திருநீற்றின் பெருமையை விளக்குதல்

 திருநீற்றின் பெருமை:💐💐

------------------------------

இரண்டாம் திருமுறை -- 66வது பதிகம் -- முதல் பாடல்:🌸

------------------------------

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு 

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு 

செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே

-------------------------------

விளக்கம்:🏵

சிவந்த பவளம் போன்ற வாயை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு:

💐💐💐💐💐💐💐

💫மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது

💐💐💐💐💐💐💐

💫வானவர் (சிவலோகத்திலுள்ளவர்) தன் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது

💐💐💐💐💐💐💐

💫அழகு தருவது 

💐💐💐💐💐💐💐

💫எல்லா நூல்களாலும் புகழப்படுவது 

💐💐💐💐💐💐💐

💫ஆகமத்தில் புகழ்ந்து சொல்லப்படுவது

💐💐💐💐💐💐💐

💫சிவசமயத்தில் நிலைத்துள்ளது 

என்று திருஞானசம்பந்தர் திருநீற்றின் பெருமையை உணர்த்துகின்றார்😇

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

Pattinathar ( பட்டினத்தார்)

 LORD SHIVA'S GOLDEN WORDS TO SAINT PATTINATHAR:

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

"Not even an eyeless needle will accompany you in the final journey of life"

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

EXPLANATION:

🌸🌸🌸🌸🌸🌸

The worldly🌍 things are temporary.  In one's final journey of life⚰( after death), no one including relatives, children, wife👨‍👩‍👦 will accompany us.  Also the jewels👑 and money💰💴💵💶 that one earned, the house🏘 one built will not accompany.  Even an eyeless needle📌 won't accompany us.  Only the effects of good🧚‍♀️ and bad🧟‍♀️ deeds which was done by us will alone accompany after death.

💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫


Saturday, 15 August 2020

How our human birth is getting wasted?

 THIRUMANTHIRAM🌸-- KAALACHAKARAM:

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

Pinangi azhindhidum paeradhu kaelnee

Ananguda naathitha naaru viriyin

Vananguda naevandha vaazhvu kulaindhu

Sunanganuk kaaga suzhalginra vaarae

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

EXPLANATION:


Let us hear how this birth which is helpful for reaching God (attaining liberation) is getting wasted by us who are caught in the cycle of birth and death


God, by his grace has given us this birth so that we may solve our past karmas and reach him.  But we don't use this birth for that reason.  We go in the way of desires, accumulate more and more of Karmas and live this life without a goal of reaching God.  Thus we waste this birth and once again get caught in the circle of birth👶🏻 and death⚰.

----------------

Whenever we go in the way of desires, we accumulate more and more of karmas and get caught in the cycle of birth👶🏻 and death⚰.

----------------


நமது இப்பிறவி எப்படி அழிகின்றது?

 திருமந்திரம்💐💐 -- மூன்றாம் தந்திரம் -- காலச்சக்கரம்:

**********

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ

அணங்குட னாதித்த னாறு விரியின்

வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து

சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே

**********

விளக்கம்🌻:  பிறவிச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு இறைவனை அடைய உதவும் இந்த பிறவி எப்படி அழிந்து போகின்றது என்பதைக் கேட்டுக் கொள்ளுங்கள்.


வினைகளைத் தீர்த்துக் கொண்டு தம்மை அடைய வேண்டும் என்பதற்காக இறைவன் கொடுத்த இப்பிறவியை உயிர்கள் தமது ஆசையின் வழியே சென்று மேலும் மேலும் அதிகமாக வினைகளை சேர்த்துக் கொண்டே இருந்தால், இந்த வாழ்க்கை சீர்குலைந்து எந்தவித இலக்கும் இல்லாமல் திரிந்து மீண்டும் மீண்டும் பிறந்து👶🏻 அழிகின்ற⚰ வாழ்க்கையாக மாறிவிடும்.

💮💮💮💮💮

கருத்து💐: உயிர்கள் ஆசையின் வழி செல்வதால் வினைகளை சேர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்துக்கொண்டே இருக்கின்றன.

🌷🌷🌷🌷🌷🌷🌷


திருநீற்றின் முக்கியத்துவம் (Importance of Sacred ash or Thiruneeru)

THIS IMAGE TELLS ABOUT THE IMPORTANCE OF SACRED ASH ( VIBHUTI OR THIRUNEERU)

💐💐💐💐💐💐💐💐💐

⭐ Eliminates bad odour🤧 from the body 

⭐ Micro organisms🦠 get eliminated from the body 

⭐Makes us clean😇

⭐Many of the diseases🤒 get cured

⭐Witchcraft🧟‍♀️ do not come near us

⭐Makes our face beautiful

⭐Increases the memory power🧠

⭐Sharpens our intellect 👨🏻‍🎓

⭐Helps to gain knowledge of God

⭐Removes our sins

⭐Helps to reach the holy feet of Lord Shiva😇

💐💐💐💐💐💐💐💐


Friday, 14 August 2020

Thevaram hymn for obtaining wealth

 This Thevaram hymn was sung by THIRUGNANASAMBANDAR 💐💐.  By Lord Shiva's grace if one sings this hymn daily in the early morning with pure devotion then along with God's grace, wealth 💰💴can be obtained

Hymn: Idarinum thalarinum

செல்வம் பெறுவதற்கு வாசிக்க வேண்டிய பதிகம்

 திருஞானசம்பந்தர் அருளிச் செய்த இப்பதிகத்தை சிவபெருமான் திருவருளால் தினமும் அதிகாலையில் இறை உணர்வோடு வாசித்தால், வேண்டிய செல்வத்தைப்💰💴 பெறலாம்.🌻🌻

பதிகம்: இடரினும் தளரினும்

Wednesday, 12 August 2020

Speciality of Vedas

------------------------

THIRUMANTHIRAM -- VEDHA SIRAPPU: 

_________________________________

Vedhathai vitta aramillai vedhathin

Hodha thagumaram ellam uladharka

Vaadhathai vittu madhignar valamutra

Vedhathai hodhiyae veedupet raargalae

_________________________________

EXPLANATION:

----------------

⭐In Vedas, God has given the mankind the right path to live and duties to be carried out in one's life 

☆☆☆☆☆☆☆☆☆☆☆

⭐There are no other scriptures other than Vedas which contain the above information 

☆☆☆☆☆☆☆☆☆☆☆

⭐There are also mantras in Vedas which can be chanted for the benefit of the world

☆☆☆☆☆☆☆☆☆☆☆

⭐Our ancestors who were rich in knowledge did not argue with the instructions given in the Vedas.  But instead, they followed the instructions given in Vedas, chanted Vedic mantras and thus they attained mukti (liberation)

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

It is not wise to argue with the instructions given in the Vedas but it is better to follow those instructions and attain liberation (mukti)😇🕊🕊

💐💐💐💐💐💐💐💐💐💐💐

வேதத்தின் சிறப்பு

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

திருமந்திரம் -- பாயிரம் -- வேதச் சிறப்பு:

🌼🌼🌼🌼🌼

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்

ஓதத் தகும்அறம் எல்லம் உளதர்க்க

வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே

🌼🌼🌼🌼🌼🌼

விளக்கம்:  

⭐வேதங்களை விட இறைவன் வழங்கிய அறம் வேறொன்றும் இல்லை.

---------------------

⭐ஓதுவதற்கும் அதன்படி நடப்பதற்கும் ஏற்ற அறங்கள் எல்லாம் வேதத்தில் உள்ளது.

---------------------

⭐நமது முன்னோரான அறிவிற் சிறந்த ஞானிகள் அனைவரும் இறைவன் வழங்கிய வேதத்தை ஏன்?? எதற்கு?? என்கிற வீண் விவாதங்கள் செய்யாமல் அனைவரும் இறைவன் வழங்கிய வேதத்தை ஓதியே முக்தியைப் பெற்றார்கள்.

💐💐💐💐💐💐💐💐💐

Tuesday, 11 August 2020

Kolaru Thirupathigam

 This Thevaram hymn was sung by THIRUGNANASAMBANDAR🌻. By Lord Shiva's grace, if one sings or reads this hymn daily in the early morning with pure devotion then the problems related to planetary positions(navagiragangal in tamil) will get solved💐💐

Hymn: Kolaru thirupathigam

கோளறு திருப்பதிகம்

 திருஞானசம்பந்தர்💐 அருளிச் செய்த இப்பதிகத்தை சிவபெருமான் திருவருளால் தினமும் அதிகாலையில் இறை உணர்வோடு வாசித்தால், நாட்களாலும் நட்சத்திரங்களாலும் திதியாலும் வரும் துன்பங்கள் நீங்கும்.🌷🌷

பதிகம்கோளறு திருப்பதிகம்


Monday, 10 August 2020

திருவாசகம் (THIRUVASAGAM)

 திருவாசகம் -- சிவபுராணம்:

💐💐💐💐💐💐

இறைவன் எங்கும் வியாபகமாக இருக்கின்றார். அவ்வாறு இருக்கும் இறைவன் நமக்குள்ளும் இருக்கின்றார் என்பதை 

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

" இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க "

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

நம் உடலின் கண்👁 இமைக்கும் அந்த சிறு நேரத்திற்கும் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும் இறைவனை மிகவும் அழகாக மாணிக்கவாசகர் வாழ்த்துகின்றார்.

---------------

எனவே நாமும், என்றும் நம்மை விட்டு ஒரு போதும் நீங்காமல் இருக்கும் சிவபெருமானை அவர் திருவருளாலே போற்றுவோமாக.😇😇

💐💐💐💐💐💐💐

--------------------------------------------------------

THIRUVASAGAM -- SIVAPURANAM 

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

GOD is present everywhere. The God who is present everywhere, is also present in hearts of everyone.

So MANICKAVASAGAR has said

---------------------------------

" IMAIPOZHUDHUM EN NENJIL NEENGAADHAAN THAALVAAZHGA "

---------------------------------

In the above line, Manickavasagar praises the god who will not leave our hearts even in the time of blinking of an eye👁 (i.e) even for a very short period 🕕..

----------------------------------

So by Lord Shiva's grace, let us worship the God who does not leave us even for a very short period 😇😇


Sunday, 9 August 2020

Thevaram hymn for cure of diseases

 This Thevaram hymn was sung by THIRUGNANASAMBANDAR🌟.  By Lord Shiva's grace, if one sings this hymn daily in early morning with pure devotion then any kind of disease can be cured (especially heat illness🥵, fever🤒 etc..)

Hymn: Thiruneetru pathigam

நோய் தீர்க்கும் பதிகம்

 திருஞானசம்பந்தர்🌻 அருளிச் செய்த இப்பதிகத்தை சிவபெருமான் திருவருளால் இறை உணர்வோடு தினமும் அதிகாலையில் வாசித்தால் எல்லா வித நோயும் குணமடையும் குறிப்பாக வெப்பு நோய்🥵, காய்ச்சல்🤒, அம்மை போன்றவை நீங்கும்.💐💐

பதிகம்திருநீற்றுப் பதிகம்

Saturday, 8 August 2020

THIRUMANTHIRAM - IMPERMANENCE OF YOUTH

 THIRUMANTHIRAM -- ILAMAI NILAYAAMAI (IMPERMANENCE OF YOUTH)

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

The verses are:

Paruvoosi aindhumhor paiyinul vaazhum

Paruvoosi aindhum parakum virugam

Paruvoosi aindhum panithalai pattaal

Paruvoosi paiyum parakindra vaarae

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

EXPLANATION:  There are five sense organs in the body (eye👁, ear👂🏽, nose👃🏿, tongue👅, skin).  In the summer season, these birds 🕊🕊fly according to their wish.  In the same way, these sense organs during youth and teenage goes in the way of fulfilling its desires.🤥

_______________

But in winter season, these birds cannot fly due to extreme cold conditions🥶 and stay in their nests.  Similarly, in the old age even if we have thought of realizing God, these sense organs do not work properly, stay with the body and die with it🤕

________________

Conclusion🌻: Youth and teenage are the precious part of one's life🌟.  During this period, we must not allow senses to go in the way of desires but must control them and cultivate interest in God and find ways of realizing him.

💐💐💐💐💐💐💐


திருமந்திரம் - இளமை நிலையாமை

 திருமந்திரம் -- முதல் தந்திரம் -- இளமை நிலையாமை:

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்

பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்

பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்

பருவூசி பையும் பறக்கின்ற வாறே.

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

விளக்கம்: உடலாகிய இந்த பையினுள் புலங்களாகிய ஐந்து ஊசிகள் உள்ளன (கண்👁, வாய்👄, மூக்கு👃🏿, செவி👂🏽, தோல்).  இப்புலங்கள் அனைத்தும் தன் விருப்பத்திற்கு பறக்கின்ற பறவைகள் போலவே.  

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

வெயில் காலத்தில் தன் ஆசைக்கேற்ப அங்கும் இங்கும் பறக்கும் பறவைகள்🕊🕊, பனிக்காலத்தில் பறந்து செல்ல வழியின்றி கூட்டுக்குள்ளே நடுங்கிக்கொண்டு🥶 இருக்கும்.

---------------------------------

அதுபோல

---------------------------------

இளமைக் காலங்களில் ஆசைகளில் வயப்பட்டு ஐந்து புலங்களையும் அதன் விருப்பத்திற்கு ஏற்ப பறக்கவிட்டால் பின்பு வயதாகி முதுமை👴🏼 வந்தபிறகு இறைவனை அடைய எண்ணம் இருந்தாலும் குளிர் காலம் நீடித்து கூட்டிற்கு உள்ளேயே பறவை இருந்து இறந்து போவது போல, ஐந்து புலங்களும் செயல் இழந்து உடலுக்குள்ளையே இருந்து இறைவனை அடைய முடியாமல் அழிந்து விடும்🤕

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

கருத்து: உயிரோடும் இளமையோடும் இருக்கும்போதே ஆசை செல்லும் வழியில் புலன்களைச் செலுத்தாமல்🚫🚫 அவைகளைக் கட்டுப்படுத்தி இறைவனின் மேல் அன்பினை ஏற்படுத்தி அவரை அடையும் வழிகளைத் தேடி அடைய வேண்டும்.

💐💐💐💐💐💐💐💐💐


Friday, 7 August 2020

Some wonders performed by THIRUGNANASAMBANDAR

 By Lord Shiva's grace, Saint THIRUGNANASAMBANDAR has performed several wonders.  A few are mentioned below: 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

(1) When THIRUGNANASAMBANDAR was at the age of 3👶🏻, he went to the temple with his father.  When his father was bathing inside the temple pond, he thought that he lost his father.  So when he cried, Devi Parvati came and fed him milk 🍼which gave him the Knowledge of God

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

(2) THIRUGNANASAMBANDAR alongside THIRUNAVUKARASAR opened the temple door in Thirumaraikaadu which was closed many years back by singing Thevaram hymns 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

(3) In Thirupaachchilaachchiramam, the King's🤴🏻 daughter had a form of epilepsy.  THIRUGNANASAMBANDAR cured it by singing Thevaram hymns.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

(4) In Thirumarugal, he removed the 🐍snake poison from the body of a trader

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

(5) In Thiruvothur, he converted the male palm trees 🌴into female ones.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

(6) In Madurai, 🤴🏻King Koonpandiyan set fire to the place where Thirugnanasambandar was staying.  So Thirugnanasambandar converted the fire🔥 into an abdominal pain and it affected Koonpandiyan.  When the 👸🏻Queen Mangaiyakarasiyaar and minister Kulachiraiyaar requested Thirugnanasambandar, he sang Thevaram hymn and cured the abdominal pain and the hunchback problem (KOON in tamil) of king and made him NINRASEER NEDUMARAN.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

(7) In Mylapore, Thirugnanasambandar gave life to a girl👩🏻 who was in the form of ashes in a pot kept by his father.

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟


திருஞானசம்பந்தர் நிகழ்த்திய சில அற்புதங்கள்

 சிவபெருமான் திருவருளால் திருஞானசம்பந்தர் நிகழ்த்திய சில அற்புதங்கள்:🌻🌻

(1) மூன்று வயதுக் குழந்தையாக👶🏻 இருந்த போது தன் தந்தையுடன் கோயிலுக்குச் சென்று அங்கே தந்தை சிறிது நேரம் நீருள் மூழ்கியிருக்கும் சமயத்தில், தந்தையைக் காணவில்லை என்ற அழுத குழந்தைக்கு தேவி பார்வதியே ஞானப்பால்🍼 தந்து அருளினார்.

🌟🌟🌟🌟🌟🌟🌟

(2) திருமறைக்காட்டில் உள்ள ஆலயத்தில் மூடியிருந்த கதவுகளை அப்பருடன் சேர்ந்து பதிகம் பாடி திறக்கவும், மூடவும் செய்தார்.

🌟🌟🌟🌟🌟🌟🌟

(3) திருபாச்சிலாச்சிரமத்தில் அரசன் மழவன் மகளின் முயலகன் நோயை நீக்கினார்.

🌟🌟🌟🌟🌟🌟🌟

(4) திருமருகலில் பாம்பு🐍 தீண்டிய வணிகனின் விடம் நீக்கினார்.

🌟🌟🌟🌟🌟🌟🌟

(5) திருவோத்துரில் ஆண்பனையைப் பெண்பனை🌴 ஆக்கினார்.

🌟🌟🌟🌟🌟🌟🌟

(6) மதுரையில் தான் தங்கியிருந்த மடத்திற்கு கூன்பாண்டியன் வைத்த நெருப்பை🔥அவருக்கே வெப்பு நோயாகப் பற்றச் செய்து, அவர் மனைவி மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் வேண்ட அந்த நோயும், அவர் கூனும் நீக்கி அவரை 'நின்றசீர் நெடுமாறன்'😇 ஆக்கினார்.

🌟🌟🌟🌟🌟🌟🌟

(7) மயிலாப்பூரில் குடத்தில் சாம்பலாக இருந்த பூம்பாவை என்னும் பெண்ணை👩🏻உயிருடன் வரச் செய்தார்



Thursday, 6 August 2020

Thiruvasagam hymn for cure of speech disorders

 THIRUVASAGAM was composed by MANICKAVASAGAR🌟.  By Lord Shiva's grace, if we sing this hymn daily in the early morning then problems related to speech like stuttering, dumbness etc. will get cured💐💐

Hymn: Cure for speech disorders



ஊமை, திக்குவாய் போன்றவை நீங்குவதற்கு வாசிக்க வேண்டிய பதிகம்

 திருவாசகம் -- இயற்றியவர் மாணிக்கவாசகர்💐.  சிவபெருமான் திருவருளால் இத்திருவாசகம் பதிகத்தை தினமும் அதிகாலையில் இறை உணர்வோடு வாசித்தால் ஊமை, திக்குவாய் போன்றவை நீங்கும்.🌻🌻

பதிகம்: ஊமை, திக்குவாய் நீங்க

Wednesday, 5 August 2020

Thevaram hymn for cure of nervous disorder, rheumatism, epilepsy

This Thevaram hymn was sung by THIRUGNANASAMBANDAR💐💐.  By Lord Shiva's grace if one sings this hymn for 48 days daily in early morning with pure devotion then nervous disorder, rheumatism, epilepsy gets cured😇

நரம்பு தளர்ச்சி, வாத நோய், வலிப்பு நோய் நீங்க வாசிக்க வேண்டிய பதிகம்

திருஞானசம்பந்தர்💐💐 அருளிச் செய்த இப்பதிகத்தை சிவபெருமான் திருவருளால் 48 நாட்கள் தினமும் அதிகாலையில் இறை உணர்வோடு வாசித்தால் நரம்பு தளர்ச்சி, வாத நோய், வலிப்பு நோய் முதலியவை நீங்கும்.
🌻🌻🌻🌻🌻🌻

Some of the wonders performed by Saint Sundarar

By Lord Shiva's grace, Saint Sundarar has performed several wonders.  A few are mentioned below:
🌻🌻🌻🌻🌻🌻🌻
(1) By Lord Shiva's grace, Sundarar got 12000💰💰 gold coins which he put in Manimuthaaru and took it from Kamalaayam.
🌟🌟🌟🌟🌟🌟
(2) Kaveri river🌊 split into two and paved the way for Sundarar to go through 
🌟🌟🌟🌟🌟🌟
(3) He changed an ordinary brick to a golden brick 
🌟🌟🌟🌟🌟🌟
(4) A child was swallowed by a crocodile three years back in Avinasi.  When Sundarar came to know about the incident, he sang a Thevaram hymn and brought the child back to his life along with his 3 year growth.
🌟🌟🌟🌟🌟🌟
(5) By Lord Shiva's grace, he lost his sight in both eyes👀.  Then he got sight in one eye in Kanchipuram and sight of other eye in Thiruvarur by singing Thevaram hymns 
🌟🌟🌟🌟🌟🌟
(6) He went to Mount kailash by a white elephant which was given to him by Lord Shiva
💐💐💐💐💐💐


சுந்தரர் நிகழ்த்திய சில அற்புதங்கள்

சிவபெருமான் திருவருளால் சுந்தரர் நிகழ்த்திய சில அற்புதங்கள்:💐💐
*******
(1) 12000 பொன்னை💰 மணிமுத்தாற்றில் போட்டு கமலாயத்தில் எடுத்தார்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(2) இவர் பொருட்டு காவிரி ஆறு🌊 இரண்டு கூறாகப் பிளந்து நின்று நடுவில் செல்ல வழிவிட்டது.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(3) செங்கல்லை தங்கக் கல்லாக மாற்றினார்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(4) அவிநாசியில் முதலை விழுங்கிய குழந்தையை👶🏻 அம்முதலையின் வாயிலிருந்து
மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தார்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(5) சிவபெருமான் திருவருளால் தன் இரு கண்ணையும்👀 இழந்து, காஞ்சியில் ஒரு கண்ணையும் திருவாரூரில் ஒரு கண்ணையும் பதிகம் பாடி பெற்றார்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(6) வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளினார்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐

 

Monday, 3 August 2020

Thevaram hymn for couple who needs the birth of a baby

Thevaram hymn for couple who needs a baby:🌺
*************
This Thevaram hymn was sung by THIRUGNANASAMBANDAR.  By Lord Shiva's grace, if one sings this hymn daily in early morning with pure devotion then a baby👶🏻 with good intellect will be born😇

குழந்தை வேண்டுவோர் வாசிக்க வேண்டிய பதிகம்

திருஞானசம்பந்தர் அருளிச் செய்த இப்பதிகத்தை சிவபெருமான்😇 திருவருளால் தினமும் அதிகாலையில் இறை உணர்வோடு வாசித்தால் நல்ல அறிவுடைய குழந்தை👶🏻 பிறக்கும்

Sunday, 2 August 2020

Some wonders performed by THIRUNAVUKARASAR

By Lord Shiva's grace, Saint THIRUNAVUKARASAR has performed several wonders due to his pure devotion for Lord Shiva.  A few are mentioned below:💐💐
**********
(1) King Mahendra Varma Pallava  ordered THIRUNAVUKARASAR to go into the burning furnace🔥 as a punishment for converting from Jainism to Shaivism.  But by Lord Shiva's grace, the burning furnace appeared like a Lotus pond❄ for him and he came out unharmed 
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
(2) King Mahendra Varma Pallava ordered to kill THIRUNAVUKARASAR by one of his war elephants🐘.  When THIRUNAVUKARASAR sang a Thevaram hymn, it came around him, fell on the land and bowed down before him🙌🏽🙌🏽
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
(3) Then, King Mahendra Varma Pallava tied THIRUNAVUKARASAR to a stone and threw him into the sea.  But he floated on the sea 🌊 along with the stone and came to the shore.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
(4) These incidents made king Mahendra Varma Pallava to convert from Jainism to Shaivism 
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
(5) By singing a Thevaram hymn, he opened the door of the temple in THIRUMARAIKAADU which was closed for many years back
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
(6) Appudhi adigal was a pure devotee of Lord Shiva and THIRUNAVUKARASAR.  When the elder son of Appudhi adigal died because of snake🐍 bite, THIRUNAVUKARASAR sang a Thevaram hymn and by Lord Shiva's grace, elder son got back his life
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
(7)After dipping into the pond of Thiruvaiyaaru, THIRUNAVUKARASAR rose to see the darshan of Lord Shiva and Parvati devi from Mount Kailash😇

திருநாவுக்கரசர் நிகழ்த்திய சில அற்புதங்கள்

சிவபெருமான் திருவருளால் திருநாவுக்கரசர் நிகழ்த்திய சில அற்புதங்கள்:
🌹🌹🌹🌹🌹🌹
(1)மகேந்திரவர்மப் பல்லவன் இவரைக் கொழுந்து விட்டு எரியும் நீற்றரையில்🔥 உள்ளே அடைத்த போது சிவபெருமான் திருவருளால் தாமரைக்குளம் போல குளிர்ந்து ❄எந்த பாதிப்பும் இல்லாமல் வெளியே வந்தார்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(2)மகேந்திரவர்மப் பல்லவன் பட்டத்து யானையை 🐘ஏவி அவரை மிதிக்கச் செய்யுமாறு செய்தான்.  அப்பர் பதிகம் பாட, யானையோ அவரை வலம் வந்து நிலத்தில் பணிந்து வணங்கியது.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(3)மகேந்திரவர்மப் பல்லவன் இவரைக் கல்லில் கட்டி கடலில் வீசிய போதும் "நற்றுணையாவது நமச்சிவாயவே" என்னும் பதிகம் பாடி கடலில்🌊 கல்லுடன் மிதந்து கரை சேர்ந்தார்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(4)மகேந்திரவர்மப் பல்லவனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறும்படி செய்தார்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(5)திருமறைக்காட்டில் மூடியிருந்த கோயில் கதவைப் பதிகம் பாடி திறக்கச் செய்தார்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(6)பாம்பு🐍 தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பெற்று எழச் செய்தார்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
(7)திருவையாற்றில் மூழ்கி எழுந்து, திருக்கயிலாயக் காட்சியைக் கண்டார்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Saturday, 1 August 2020

Thevaram hymn for getting rid of problems in right eye and getting a better vision

This hymn was sung by 🌸🌸SUNDARAR 🌸🌸.  By Lord Shiva's grace, if this hymn is sung daily in early morning with pure devotion then problems related to RIGHT EYE gets cured and would get a BETTER VISION in right eye🌹🌹

வலது கண் இடர்கள் நீங்கி நல்ல கண் பார்வையைப் பெறவதற்கான தேவாரப் பதிகம்

💐💐சுந்தரர்💐💐 அருளிச் செய்த இப்பதிகத்தை சிவபெருமான் திருவருளால் தினமும் அதிகாலையில் இறை உணர்வோடு வாசித்தால் வலது கண் இடர்கள் நீங்கி நல்ல பார்வையைப் பெறலாம்.🌻🌻

பதிகம்மீளா அடிமை