Search This Blog

Thursday, 29 October 2020

Pattinathar's Song

Pattinathar's Song:💐

--------------------

Vaalaal maga arindhu oota vallaen allaen

Maadhu sonna soolaal ilamai thurakka vallaen allaen

Thondu seiya naalaarir kannidandhu appa vallaen allaen 

Naanini sendru aalaavadhu eppadiyho thirukaalathiyappanukkhe

------------

EXPLANATION:

------------

In this song, Pattinathar says that Siruthonda Nayanar cut🔪 his son👦🏻 and served him as a food for the devotee but Pattinathar could not do that

🌟🌟🌟🌟🌟

Tiruneelakanda Nayanar gave up the pleasures of his youthful👦🏻 age due to the oath made by his wife but Pattinathar could not do that.

🌟🌟🌟🌟🌟

Kannapa Nayanar donated his eye👁 for Lord Shiva without any hesitation but Pattinathar could not do that.

🌟🌟🌟🌟🌟

In the above song, Pattinathar says that his devotion to Lord Shiva is inferior🤏🏼 when compared to the above 3 great persons

--------------

Moreover, Pattinathar was a saint and an ardent devotee of Lord Shiva.  If a great person like Pattinathar says that his devotion is inferior, then we must think🤔 about our condition😑.

--------------

This song makes us realize that even if we do some good things in the name of God, we must not consider ourselves as greatest devotee (Bhakta).



பட்டினத்தார் பாடல்

பட்டினத்தாரின் பாடல்:
-------------
வாளால்‌ மக அரிந்து ஊட்ட வல்லேன்‌ அல்லேன்‌ 

மாது சொன்ன சூளால்‌ இளமை துறக்க வல்லேன்‌ அல்லேன்‌ 

தொண்டு செய்ய நாளாறிற்‌ கண்ணிடந்து அப்ப வல்லேன்‌ அல்லேன்‌ 

நானினிச்‌ சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தியப்பனுக்கே.
--------------
விளக்கம்🌸:
-----------
சிறுத்தொண்ட நாயனார்‌, சிவபெருமானின் அடியாரைத்‌ திருப்தி செய்ய தன்‌ மகனையே👦🏻 அறுத்து கறி சமைத்தார்‌.
🌟🌟🌟🌟🌟
திருநீலகண்ட நாயனாரின்‌ மனைவியின்‌ சொல்லால்‌, அவர்‌ இன்பத்தைத்‌ துறந்தார்‌. 
🌟🌟🌟🌟🌟
கண்ணப்ப நாயனார்‌ தனது கண்ணை👁 சிவபெருமானுக்கு வழங்க சிறிதும் தயங்கவில்லை. இப்படி எல்லாம்‌ என்னால்‌ செய்ய இயலாதே என்று பாடுகிறார்‌ பட்டினத்தார்‌.
---------------
பட்டினத்தார் சிறந்த சிவபக்தரும், துறவியும் ஆவார். அவ்வாறு இருக்கும் அவரே இவ்வாறு தனது சிறுமையைக் கூறுகிறார் என்றால் நமது நிலையை எண்ணிப்🤔 பார்க்க வேண்டும்.
--------------
நாம் செய்யும் செயல்களைக் கொண்டு நாமும் பெரிய பக்தி உடையவர்கள் என்று எண்ணுதல் கூடாது🚫 என்பதை இப்பாடல் உணர்த்துகின்றது.


Tuesday, 27 October 2020

8 types of Lingam

Lingam can be divided into 8 types:

🌸🌸🌸🌸🌸🌸🌸

1. Swayambhu Lingam - Lingam that manifests on its own.

🌟🌟🌟🌟🌟

2. Devi Lingam - Lingam worshipped by Devi Sakthi (Parvati)

🌟🌟🌟🌟🌟

3. Kaana Lingam - Lingam worshipped by Lord Shiva's sons (Lord Ganesha and Lord Muruga)

🌟🌟🌟🌟🌟

4. Dheiveega Lingam - Lingam worshipped by Devas

🌟🌟🌟🌟🌟

5. Aarida Lingam - Lingam worshipped by sages like Agasthiyar 

🌟🌟🌟🌟🌟

6. Raatchadha Lingam - Lingam worshipped by raakshas

🌟🌟🌟🌟🌟

7. Asura Lingam - Lingam worshipped by Asuras

🌟🌟🌟🌟🌟

8. Maanuda Lingam - Lingam constructed and worshipped by humans

🌟🌟🌟🌟🌟

In the above 8 types, there are further 1008 subtypes of Lingam

எட்டு வகை லிங்கம்

அனைத்து லிங்கங்களையும்‌ மொத்தம்‌ எட்டு வகைகளாக பிரிக்கலாம்‌. அவை முறையே: 

🌸🌸🌸🌸🌸🌸🌸

1. சுயம்பு லிங்கம்‌ -  தானாய்‌ தோன்றிய லிங்கம்‌. 

🌟🌟🌟🌟🌟

2. தேவி லிங்கம்‌ - தேவி சக்தியால்‌ வழிபடப்பட்ட லிங்கம்‌. 

🌟🌟🌟🌟🌟

3. காண லிங்கம்‌ -  சிவமைந்தர்களான விநாயகர்‌ முருகர்‌ இவர்களால்‌ வழிபடப்பட்ட லிங்கம்‌. 

🌟🌟🌟🌟🌟

4. தெய்வீக லிங்கம்‌ - தேவர்களால்‌ வழிபடப்பட்ட லிங்கம்‌. 

🌟🌟🌟🌟🌟

5. ஆரிட லிங்கம்‌ - அகத்தியர்‌ போன்ற முனிவர்களால்‌ வழிபடப்பட்ட லிங்கம்‌. 

🌟🌟🌟🌟🌟

6. ராட்சத லிங்கம்‌ -  ராட்சதர்களால்‌ வழிபடப்பட்ட லிங்கம்‌. 

🌟🌟🌟🌟🌟

7. அசுர லிங்கம்‌ - அசுரர்களால்‌ வழிபடப்பட்ட லிங்கம்‌. 

🌟🌟🌟🌟🌟

8. மானுட லிங்கம்‌ - மனிதர்களால்‌ செதுக்கப்பட்டு வழிபடப்பட்ட லிங்கம்‌. 

🌟🌟🌟🌟🌟

இந்த எட்டு வகை லிங்கங்களிலும்‌ மொத்தம்‌ 1008 லிங்கங்கள்‌ உள்ளது.

Sunday, 25 October 2020

Some points regarding Siva Lingam

SIVA LINGAM:

---------------

The Five elements (Fire🔥, Water💧, Space🌌, Land🌏 and Air🌬) form the basics of life in this earth. These five elements are formed from the Two kinds of sakthi (Power or Energy) (i.e) movable and immovable. These two energies has become male👦🏻 and female👧🏻 forms and forms the basis of operation of this world. The LINGAM is the combination of the 'Purusha' symbol of universal male and 'Prakriti' symbol of universal female. LINGAM is the aniconic representation of Lord Shiva. The word 'LIM (LIN)' denotes the creation of a life and 'GAM' denotes the destruction of a life. And LINGAM denotes Lord Shiva who is responsible for both creation and destruction.

---------------

The five Gods Brahma, Vishnu, Rudra, Maheswara, Sadasiva are the components of Lord Shiva. Only three zones which represent the above 5 Gods are visible in Lingam. The lower zone denotes Lord Brahma (The creator). The middle zone denotes Lord Vishnu (The Preserver) and the top zone denotes Lord Rudra (The Destroyer).  Lord Maheshwara (The Concealer), Lord Sadashiva (The Bestower of Grace) are combined with the other three Gods and do not have a separate zone in the Lingam.



சிவ லிங்கம் குறித்து சில தகவல்கள்

 சிவலிங்கம்:

💐💐💐💐💐💐

பிரபஞ்சத்தின்‌ அடிப்படையாக இருப்பது பஞ்ச பூதங்கள்‌. இந்த பஞ்ச பூதங்களும்‌ அசையும்‌ சக்தி அசையா சக்தி என்கிற இரண்டு சக்தி மயங்களிலிருந்து உருவானவை. இந்த இரண்டு சக்தி மயங்களே ஆண்‌ பெண்‌ என்கிற இரண்டு பாலாகி உலகத்தின்‌ அனைத்து இயக்கத்திற்கும்‌ அடிப்படையாக இருக்கின்றது. ஆண்‌ மற்றும்‌ பெண்ணின்‌ குறியீடுகளான பிராகிருதி👧🏻 மற்றும்‌ புருஷ்‌👦🏻 ஆகிய இரண்டின்‌ கூட்டாக அமைந்திருப்பது தான்‌ சிவபெருமானின்‌ லிங்க வடிவம்‌. லிங்கம்‌ எனும்‌ சொல்‌ சிவபெருமானின்‌ அருவுருவ நிலையைக்‌ குறிப்பதாகும்‌. லிம்‌ என்பது உயிர்களின்‌ தோற்றத்தைக்‌ குறிக்கும்‌. கம்‌ என்பது அவற்றின்‌ ஒடுக்கத்தைக்‌ குறிக்கும்‌ சொல்லாகும்‌. உயிர்கள்‌ தோன்றுவதற்கும்‌ ஒடுங்குவதற்கும்‌ உரிய இடமாக சிவபெருமான்‌ உள்ளதால்‌ லிங்க உருவம்‌ சிவலிங்கம்‌ என்ற பெயர்‌ பெற்றது. 

----------------

பிரம்மா, விஷ்ணு, உருத்திரன்‌, மகேஸ்வரன்‌, சதாசிவன்‌ என்ற ஐந்து மூர்த்திகளையும்‌ தனது பகுதிகளாக்‌ கொண்டது சிவலிங்கம்‌. இதில்‌ மூன்று பகுதிகள்‌ மட்டுமே கண்ணுக்கு👁 தெரியும்‌. அதன்‌ அடிப்பகுதி படைக்கும்‌ பிரம்மாவைக்‌ குறிக்கிறது. மத்தியப்‌ பகுதி காக்கும்‌ விஷ்ணுவைக்‌ குறிக்கிறது. மேல்‌ பகுதி அழிக்கும்‌ உருத்திரனைக்‌ குறிக்கிறது. மறைத்தல்‌ தொழிலை செய்யும்‌ மகேஸ்வரனும்‌ அருளும்‌ தொழிலை செய்யும்‌ சதாசிவனும்‌ மீதி மூன்று தொழில்களோடு மறைமுகமாக கலந்திருக்கின்றார்கள்.



Friday, 23 October 2020

How our attitude should be??

 When a person remembers with humility how small he is, he will be greatly blessed😇. What seems small🤏🏼 has the capacity for great strength💪🏽. So cease🚫 to think of yourself as being of little worth or consequence. What is small today can be of great importance tomorrow. 

One must not have narrow-mindedness🚫. Remove all fears😰 from the mind. Everything will soon become alright. One also need to speak openly to God at the time of worship🙏🏾. One must set aside their ego filled mind and listen. If one act in such a manner, one will find good results😇.

For more spiritual thoughts:

Link for spiritual thoughts



எவ்வாறு இருத்தல் வேண்டும்??

 சிறியவன்‌ சிறியவனாக ('நான் தான் பெரியவன்' என்ற அகங்காரம் இல்லாமல்)  இருக்க பெரும்‌ அருள்‌ உண்டு😇. சிறியது🤏🏼 பின்பு பெரியதாகும்‌💪🏽 திறன்‌ உண்டு. நாம்‌ சின்னவன்‌ (நாம்‌ கீழான இடத்தில்‌ இருக்கின்றோம்‌ மற்றவர்கள்‌ மேலான இடத்தில்‌ இருக்கின்றார்கள்‌) என்ற எண்ணம் இருத்தல் கூடாது🚫😑. இன்று சின்னது என்பது நாளை பெரிதாகும்‌. குறுகிய மனப்பான்மை இருத்தல் கூடாது🚫. பயத்தை😰 மனதிலிருந்து நீக்கி விடுதல் அவசியம். பின்பு அனைத்தும்‌ சீராகும்‌. பூஜைகளில்‌ இறைவனிடம்‌ மனம்‌ விட்டு கூறியும்‌ மனம்‌ விட்டு கேட்கவும்‌ வேண்டும்‌. இவ்விதம்‌ செய்திட நல்முடிவுகள்‌ உண்டாகும்😇.

மேலும் ஆன்மிகம் கருத்துக்கள் வாசிக்க:

ஆன்மிகம் கருத்துக்கள்




 


Wednesday, 21 October 2020

Never insult your Guru (spiritual master)

THIRUMANTHIRAM -- Second Tantra -- Insult to Guru (Spiritual Master):

--------------

Horezhuth oruporul unarak kooriya

Seerezhuth thaalarai sidhaya seppinhor

Ooridai sunanganaai pirandhan khorugam

Paaridai kirumiyaai pazhaguvar mannilae

--------------

EXPLANATION:

--------------

Thirumoolar says that the disciple who talk🤬 bad about the Guru (spiritual master) who had taught the disciple the true meaning of 'OM' (Pranava mantra), will be born as a diseased dog🐕 in his next birth and roam around, then he would be born as a worm🐛 and crawl in the earth for ages.

------------------------



குருவை நிந்தித்தல் கூடாது

திருமந்திரம் -- இரண்டாம் தந்திரம் -- குரு நிந்தை:

*********

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய

சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்

ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்

பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே

**********

விளக்கம்:

--------------

'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை சீடனுக்கு உணர்த்திய குருவின் பெருமை குலையும்படி தவறாகப் பேசுகின்ற🤬 சீடர்கள் ஊர் சுற்றித் திரியும் நோயுள்ள நாயாகப்🐕 பிறந்து பின்னர் ஒரு யுகத்திற்குப் பூமியில் புழுவாக🐛 கிடப்பார்கள் என்று திருமூலர் கூறுகின்றார்.

--------------





Monday, 19 October 2020

From whom knowledge of God can be attained??

THIRUMANTHIRAM -- Second Tantra -- Insult to Guru (Person who has attained the knowledge of God)

------------

Petrirun dhaaraiyum paenaar kayavargal

Utrirun dhaarai ulaivana solluvar

Katrirun dhaarvazhi utrirun dhaaravar

Petrirun dhaarandri yaarperum paerae

------------

EXPLANATION:

(i) People with degrading thoughts who do not respect the person who had attained true knowledge (Knowledge of God), (ii) People who talk of ill🤬 of those knowledgeable persons and their surroundings 

Will go in the way of those people who learnt education👨🏻‍🎓👩‍🎓 alone and try to gain the knowledge of God.

----------

Thirumoolar says that they cannot attain knowledge of God except from those great people who had attained it.



ஞானம் பெறுவதற்கான வழி

திருமந்திரம் -- இரண்டாம் தந்திரம் -- குரு நிந்தை💐💐

------------

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்

உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்

கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்

பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே

-------------

விளக்கம்:

ஞானத்தை அறிந்த பெரியோர்களை மதிக்காத கீழான எண்ணமுடையவர்கள் அப்பெரியோர்களின் உடனிருப்பவர்களையும் வருந்தும்படி கீழ்மையாக பேசுபவர்கள்🤬 ஆகிய இவர்கள் ஞானமில்லாமல் கல்வியை👩‍🎓👨🏻‍🎓 மட்டுமே அறிந்தவர்களின் வழியில் சென்று ஞானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஞானத்தை அடைய முயற்சிப்பார்கள்.  ஞானத்தை அறிந்த பெரியோர்களால் கிடைக்காத ஞானம் வேறு யாரிடம் கிடைக்கும்?? என்று திருமூலர் உரைக்கின்றார்



Sunday, 18 October 2020

Thirunavukkarasar and Thirugnanasambandhar (திருநாவுக்கரசர் & திருஞானசம்பந்தர்)

 திருநாவுக்கரசரும் (இடது), திருஞானசம்பந்தரும் (வலது) இருக்கும் படம்.

ஓம் சிவாயநம

------------------

This picture contains Thirunavukarasar (left) and Thirugnanasambandhar (right)

Om Sivaaya Namah 

------------------



Thursday, 15 October 2020

There is only one God

5 to 6 traders who speak different languages gathered at a place. They individually asked the nearby shopkeeper to bring them water💧 in their own language. 

One of them said:

⭐"Paani laaho" in hindi

Other one said: 

⭐"Thanneer kondu vaa" in Tamil 

So there arouse different words like Paani, water, thanneer, neelu etc.. according to their own language. 

--------------

Then a man who doesn't know any of their languages came there. Since he heard different words, he thought🤔 that everyone asked different things from the shopkeeper but shopkeeper gave water💧to everyone. He was surprised😧 to know that everyone asked for water but in different ways.

🌟🌟🌟🌟🌟🌟

The same 'WATER' when spoke in different languages, we hear it in many ways. But when we actually see the object, we realize that they are one and not different. Water is a single substance but everyone by their experience says it in a different way.

Similarly, God is One. Everyone by their experience, worships the single God in many ways😇.

---------------

When we go nearer and nearer to God, we shall experience the truth that all Gods are the same and God is one😊.

---------------



இறைவன் ஒருவரே!!

 ஐந்தாறு மொழிகளைப் பேசுகிற வியாபாரிகள் ஓர் இடத்தில் ஒன்று கூடினார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் அருகில் இருந்த பணியாளரிடம் பார்த்து தங்கள் மொழியிலேயே தண்ணீர்💧 கேட்டார்கள். 

⭐பானி லாவோ என்றார் ஒருவர். 

⭐தண்ணீர் கொண்டு வா என்றார் மற்றொருவர். 

இப்படியே அவரவர்கள் பேசிய வார்த்தைகள் வேறு வேறு மொழிகளில் கேட்டனர். பானி, வாட்டர், தண்ணீர், நீள்ளு என அனைவரின் மொழிக்கேற்ப வேறு வேறு ஒலிகள் அங்கு கேட்டது.

-----------------

அவர்கள் அனைவரும் பேசிய மொழிகளைத் தெரியாத ஒருவர் அங்கே இருந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வார்த்தைகளை சொல்லி ஒரு பொருளை கொண்டு வர சொன்னதை உணர்ந்தார். ஒவ்வொருவரும் வேறு பொருள்களைக் கொண்டு வரச் சொல்லுகிறார்கள் என்று எண்ணிக் 🤔கொண்டார். சிறிது நேரம் கழித்து அனைவருக்கும் தண்ணீரைக்💧 கொண்டு கொடுத்தார் பணியாள். ஒரே பொருளைத் தான் இவ்வளவு பேரும் கேட்டிருக்கின்றார்கள். வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாகக் கேட்டார்களே என்று ஆச்சரியப்பட்டார்😧 மொழி தெரியாதவர்.

🌟🌟🌟🌟🌟🌟

தண்ணீரின் பெயரை பல்வேறு மொழியில் சொல்லும் போது அது வெவ்வேறாகக் காதில் படுகிறது. ஆனால் அந்தப் பெயருக்கு உரிய பொருளைக் காணும்போது எல்லாம் ஒன்றுதான் என்று தெரியவருகிறது. தண்ணீர் ஒரு பொருளே அதனை அறிந்தவர்கள் அவர்களுக்கு புரிந்த மொழிகளில் சொல்கிறார்கள். அதுபோல கடவுளும் ஒருவரே அவரவர்களுக்கு கிடைத்த அனுபவத்தில் ஒரே கடவுளைப் பலரும் பல வகைகளில் வழிபடுகிறார்கள்😇. 

------------

கடவுளிடம் நெருங்க நெருங்க எல்லாக் கடவுளரும் ஒன்றே என்ற உண்மையை அனுபவத்தில் உணரலாம்.😊

------------



Tuesday, 13 October 2020

THIRUMANTHIRAM -- Chandra Yogam

THIRUMANTHIRAM -- 3rd Tantra -- Chandra Yogam:

*********

Eidhu madhikalai sookathi laeriyae

Eidhuva thoolam iruvagai pakkathul

Eidhun kalai pola aeri irangumaan

Thuyyadhu kukkathu thoolatha kaayamae

**********

EXPLANATION:

----------------

Thoughts rise from the gross body to the subtle body and it descends from subtle body to the gross body.  This looks like the phases of moon🌒🌔🌕 which increases and then decreases. 

The gross body gets purer according to the purity which the subtle body attains.



திருமந்திரம் -- சந்திர யோகம்

திருமந்திரம் -- மூன்றாம் தந்திரம் -- சந்திர யோகம்:

********

எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே

எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்

எய்துங் கலை போல ஏறி இறங்குமாந்

துய்யது குக்கத்துத் தூலத்த காயமே

*********

விளக்கம்:

-------------

எண்ணங்கள் தூல உடலில் இருந்து சூட்சும உடலுக்கு ஏறியும், சூட்சும உடலில் இருந்து தூல உடலுக்கு இறங்கியும் வரும்.  இது சந்திரனின் வளர்பிறை தேய்பிறை🌒🌔🌕 போன்று இருக்கும்.

சூட்சும உடல் தூய்மை அடைவதற்கு ஏற்ப தூல உடம்பும் தூய்மை அடையும்.



Saturday, 10 October 2020

Truth told by Thirunavukkarasar

 Fifth Thirumurai -- Hymn 90 -- Song 5:

🌟🌟🌟🌟🌟

Pookai kondaran ponnadi potrilaar

Naakai kondaran naamam navilgilaar

Aakai kaeyirai thaedi yalamandhu

Kaakai kaeyirai yaagi kazhivarae

🌟🌟🌟🌟🌟

EXPLANATION:

----------------

THIRUNAVUKARASAR says that one who does not offer flowers💐 to worship Lord Shiva's holy feet, one who does not chant the holy name of Lord Shiva with their tongue👅; will search food🍞🥦 only for their stomach and by this, they get destroyed by becoming the food to a crow.



திருநாவுக்கரசர் கூறும் உண்மை

 ஐந்தாம் திருமுறை -- பதிகம் 90 -- பாடல் 5:

🌟🌟🌟🌟🌟

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்

நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்

ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து

காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே

🌟🌟🌟🌟🌟

விளக்கம்:

பூக்களைக்💐 கையில் கொண்டு சிவபெருமானின் திருவடிகளைப் போற்றுதலில்லாதவர்களும், நாவினைக்👅 கொண்டு இறைவன் திருநாமத்தை நவிலாதவர்களும் தத்தம் உடலுக்கே உணவு🍞🥦 தேடிச் சுழன்று இறுதியில் காக்கைக்கே தாம் இரையாகி ஒழிவர்.



Thursday, 8 October 2020

6 enemies of Human

 SIX ENEMIES OF HUMAN:

🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️

Since they act as obstacles for a man/woman to carry out their primary duty, these are known as 'ENEMIES' for us

🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️

What is our primary duty??

***********

Our primary duty is to realize God and to reach his holy feet

🌟🌟🌟🌟🌟🌟

They (6 enemies) is the main cause of our rebirth.  So with the help of God, let us all defeat those six enemies and reach the holy feet of God😇.

🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️

We must never forget that the enemies are always with us and not far away



மனிதனின் 6 எதிரிகள்

 மனிதனின் ஆறு எதிரிகள்👹:

🔹️🔹️🔹️🔹️🔹️🔹️

இவை மனிதனின் ஆறு எதிரிகள் என்று அழைக்கப்படுவதற்கு காரணம்; இவை மனிதன் தனது கடமையை செய்வதற்குத் தடையாக உள்ளன.

🔹️🔹️🔹️🔹️🔹️🔹️

மனிதனின் கடமை என்ன??

********

இறைவனை உணர்ந்து அவர் திருவடிகளை அடைவதே மனிதனின் அடிப்படை கடமையாகும்.

🌟🌟🌟🌟🌟🌟

இவை அனைத்தும் நாம் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

எனவே, இறைவனின் துணையைக் கொண்டு இந்த எதிரிகளை வென்று நாம் இறைவனின் திருவடிகளை அடைவோமாக😇.

🔹️🔹️🔹️🔹️🔹️🔹️

எதிரிகள் வெளியில் எங்கும் இல்லை.  நம்முடனே இருக்கின்றார்கள் என்பதனை என்றும் மறந்துவிடக் கூடாது.



Tuesday, 6 October 2020

THIRUMANTHIRAM -- Siva Nindhai (Insult to Lord Shiva)

THIRUMANTHIRAM -- Second Tantra -- Siva Nindhai (Insult to Lord Shiva)
--------------------
Appagai yaalae asurarun dhevarum
Narpagai seidhu naduvae mudindhanar
Eppagai yaagilum eidhaar iraivanai
Poipagai seiyyinum ondrupath thaamae
---------------------
EXPLANATION:
 🌟The arrogance or pride of Devas and Asuras which are born out of their ignorance, makes them develop hatred towards Lord Shiva and this leads to their destruction 
------------------
 🌟Whatever may be the type of hatred one has towards Lord Shiva, it does not help them to attain his holy feet
------------------
 🌟Even if it is not a true enemity or hatred, the evil effects of it (developing hatred towards Lord Shiva) gets multiplied 10 times and affects us.
------------------


திருமந்திரம் -- சிவ நிந்தை

திருமந்திரம் -- இரண்டாம் தந்திரம் -- சிவ நிந்தை:

------------------------

அப்பகை யாலே அசுரருந் தேவரும்

நற்பகை செய்து நடுவே முடிந்தனர்

எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்

பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே

-------------------------

விளக்கம்:

 🌟அறியாமையால் வரும் அகங்காரத்தால் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானுடன் பகைமை கொண்டு விரைவில் அழிந்து போனார்கள்.

---------------

 🌟சிவபெருமானுடன் எந்த வகையான பகைமை கொண்டாலும் அவரை அடைய இயலாது.

---------------

 🌟அது பொய்யான பகையாக இருந்தாலும் அதனால் வரும் தீமை ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருகி அழிக்கும்

*******



Sunday, 4 October 2020

THIRUVASAGAM -- The Sacred Caaral -- Song 2:

THIRUVASAGAM -- The Sacred Caaral (Thiruchaazhal in tamil) -- Song 2:

⭐⭐⭐⭐⭐

(Verses taken from G.U Pope's English translation of THIRUVASAGAM)

My father, Embiraan, to all intend is Ruler Supreme;

Yet He wears a clouded Kovanam; and why this be so, MY DEAR?

The Vedas four, the meaning with which all lore is fraught, as the great thread Himself alone as Kovanam He spreads; behold, CAARALO!

⭐⭐⭐⭐⭐

EXPLANATION:

----------------

This Hymn is the befitting answers given by King's daughter in response to the questions asked by the Buddhists

----------------

The explanation of the song is given in below picture

----------------

INNER MEANING:

For every living being to reach his holy feet, Lord Shiva has given the Vedas to us and he himself stands as the meaning which are mentioned in those Vedas.

-----------------



திருவாசகம் -- திருச்சாழல் -- பாடல் 2:

 திருவாசகம் -- திருச்சாழல் -- பாடல் 2:

⭐⭐⭐⭐⭐

என்னப்பன் எம்பிரான்  எல்லார்க்குந் தான்ஈசன்

துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ 

மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்                               

தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ

⭐⭐⭐⭐⭐

விளக்கம்🌸:

இப்பதிகம் புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விக்கு மன்னனின் மகளே விடையைக் கூறுவது போல் அமைந்துள்ளது.

------------------

இப்பாடலின் விளக்கம் கீழே இருக்கும் படத்தில் உள்ளது

------------------

உட்பொருள்🌸:

இறைவன் உயிர்கள் தம்மை அடைய உதவும் பொருட்டு வேதங்களாகவும், வேதங்களில் விளக்கப்பட்ட பொருள்களாகவும் விளங்குகின்றார் என்று மாணிக்கவாசகர் விளக்குகின்றார்.



Friday, 2 October 2020

THIRUVASAGAM -- The Sacred Caaral -- song 1

THIRUVASAGAM -- The Sacred Caaral (Thiruchaazhal in tamil) -- Song 1:

⭐⭐⭐⭐⭐

(Verses taken from G.U Pope's English translation of THIRUVASAGAM)

What he smears is 'white ash' ; what He wears is an angry snake;

What he speaks with His lips divine is the mystic word, it seems; MY DEAR!

What He smears, what He says, what He wears are the means by which He,

As my Lord, rules me; and of all that hath life the Essence is He! CAARALO!

⭐⭐⭐⭐⭐

EXPLANATION:

----------------

This Hymn is the befitting answers given by King's daughter in response to the questions asked by the Buddhists

----------------

The explanation of the song is given in below picture



திருவாசகம் -- திருச்சாழல் -- பாடல் 1:

 திருவாசகம் -- திருச்சாழல் -- பாடல் 1:

🌸🌸🌸🌸🌸🌸

பூசவது வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்

பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை

ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ

🌸🌸🌸🌸🌸🌸

விளக்கம்:

இப்பதிகம் புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விக்கு மன்னனின் மகளே விடையைக் கூறுவது போல் அமைந்துள்ளது.

------------------

இப்பாடலின் விளக்கம் கீழே இருக்கும் படத்தில் உள்ளது